Close Menu
    What's Hot

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    ப்ளூடூத் இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா?. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

    அரசு கஜானாவை ஆளும் KAS!. 50 ஆண்டு அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த ‘நிதித்துறை’ அங்கீகாரம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»”பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இல்லாமல் அழிக்கப்படும்”!. இந்திய ராணுவ தளபதி வார்னிங்!
    இந்தியா

    ”பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இல்லாமல் அழிக்கப்படும்”!. இந்திய ராணுவ தளபதி வார்னிங்!

    Editor web3By Editor web3May 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Upendra Dwivedi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டு, பயங்கரவாதிகளைத் தன் மண்ணில் வளர்த்து வந்தால், அவர்கள் உலக வரைபடத்தில் (பூகோளத்தில்) நீடிக்க வேண்டுமா அல்லது வரலாறாக மாற வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்று இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

    டெல்லி மானேக்சா மையத்தில் நடைபெற்ற ‘யூனிஃபார்ம் அன்வெயில்டு’ (Uniform Unveiled) கலந்துரையாடல் நிகழ்வில் ராணுவ தளபதி கலந்து கொண்டார். அப்போது, கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) போன்றதொரு சூழல் மீண்டும் ஏற்பட்டால் இந்திய ராணுவம் எவ்வாறு பதிலடி கொடுக்கும் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்குப் பதிலளித்துப் பேசிய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, நான் ஏற்கனவே கூறியதைத்தான் இப்போதும் சொல்கிறேன். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளைத் தன் நாட்டில் தங்க வைத்து, இந்தியாவிற்கு எதிராகச் சதி வேலைகளில் ஈடுபட்டால்,  பாகிஸ்தான் உலக வரைபடத்தில் நீடிக்க விரும்புகிறதா? அல்லது அப்படி ஒரு நாடு இருந்ததாக வரலாற்றில் நினைவுகூரப்பட விரும்புகிறதா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள் என கடுமையாக எச்சரிக்கை செய்தார்.

    கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பகல்காம் பகுதியில் நடந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்  உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை  நடத்தியது.

    இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராகத் தாக்குதல் நடத்த முயன்றது. அதற்கு இந்தியப் படைகள் கொடுத்த கடுமையான எதிரடித் தாக்குதல்களும் இந்த ஆபரேஷனின் கீழ் தொடர்ந்தன. அணு ஆயுதம் கொண்ட இரு அண்டை நாடுகளுக்கு இடையே சுமார் 88 மணி நேரம் நீடித்த இந்த கடுமையான ராணுவ மோதல், கடந்த ஆண்டு மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சுமுக உடன்பாட்டிற்குப் பின்பே முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையில் “கிளாண்டர்ஸ்” தொற்றால் குதிரை பலி! மனிதர்களுக்கும் பரவும் அபாயம்!. 
    Next Article டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!. மே 22-ல் பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு?
    Editor web3
    • Website

    Related Posts

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    May 16, 2026

    அரசு கஜானாவை ஆளும் KAS!. 50 ஆண்டு அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த ‘நிதித்துறை’ அங்கீகாரம்!.

    May 16, 2026

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    ப்ளூடூத் இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா?. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

    அரசு கஜானாவை ஆளும் KAS!. 50 ஆண்டு அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த ‘நிதித்துறை’ அங்கீகாரம்!.

    முத்துக்காளை மனைவிக்கு உயர் சிகிச்சை!. அமைச்சரை மருத்துவமனைக்கே அனுப்பிய முதல்வர் விஜய்!

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    Trending Posts

    எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம்; மூன்றெழுத்து நடிகை என் குடும்பத்தை கெடுத்தார்!. ரவி மோகன் உருக்கம்!

    May 16, 2026

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    May 16, 2026

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    முதலமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!. 6 முக்கிய கோரிக்கைகள் ஒப்படைப்பு!

    May 16, 2026

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.