Close Menu
    What's Hot

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆட்சியரகத்தில் அரங்கேறிய தீக்குளிப்பு –  மாறும் ஆட்சிகள் – மாறாத காட்சிகள்
    Featured

    ஆட்சியரகத்தில் அரங்கேறிய தீக்குளிப்பு –  மாறும் ஆட்சிகள் – மாறாத காட்சிகள்

    Editor TN TalksBy Editor TN TalksMay 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 fire
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பாக நிலப் பிரச்சனை காரணமாக மாற்றுத்திறனாளி விவசாயி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மாதர்சனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன்.

    இவரது நிலத்தின் ஒரு பகுதியை சென்னையில் குடியிருந்து வரும் திம்மையா என்பவரது மகன் நவீன் மற்றும் சித்தன் ஆகியோர் அபகரித்துள்ளதோடு, அடியாட்களை வைத்து வெங்கடேசனை அடித்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால், தனக்குச் சொந்தமான 20 சென்ட் நிலத்தினை அளந்து கொடுக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு வெங்கடேசன்  மனு கொடுத்துள்ளார்.

    எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளார்.

    பின்னர் வெளியே வந்த அவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளார். இதில் உடலில் நெருப்பு பிடித்து கதறிய அவரை அங்கு பாது காப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றி நெருப்பை அனைத்துள்ளனர்.

    தொடர்ந்து உயிருக்கு போராடிய வெங்கடேசனை மீட்டு,  108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நிலத்தினை அளந்து கொடுக்காமல் ஓராண்டாக காலதாமதம் செய்து வந்ததால், மனமுடைந்த மாற்றுத் திறனாளி விவசாயி,  தீக்குளித்து கற்கொலைக்கு முயன்ற சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுவதுண்டு. பல்வேறு கோரிக்கைகளுடன், ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தங்கள் குறைகளைச் சொல்ல வருவதுண்டு. சில நேரங்களில் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காமல் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுபவர்கள் விரக்தியில் தங்கள் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சிப்பதும் உண்டு. நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் குழந்தையைக்கு தீவைத்துவிட்டு பெற்றோரும் தீக்குளித்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது.

    இதனால் மக்கள் குறைதீர்க்கும் நாள்களில், இந்த அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கூடுதலாகப் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மாவட்ட ஆட்சியரகங்களில் நிறுத்தப்படுவதுண்டு. அவ்வாறு இருந்தும்,  கிருஷ்ணகிரு ஆட்சியரகத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஆட்சிகளில்தான் இதுபோன்ற  அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளது என்றால், புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் இது தொடர்கதையாவது, ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லையோ என்னும் எண்ணத்தையே ஏற்படுத்தியுள்ளது.

    மு.செய்யது

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!. சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு!
    Next Article திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய ரூ.5கோடி கஞ்சா – விசாரணை
    Editor TN Talks

    Related Posts

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    July 4, 2026

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    July 4, 2026

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    திருப்பூர் : கர்ப்பிணி காதல் மனைவியை கொலை செய்த கணவர்..! தானும் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன?

    அரசு வழக்கறிஞர் நியமனம்; அமைச்சர் புஸ்சி ஆனந்த் ரூ.120 கோடி வசூல்வேட்டை – யூ டியூபர் மாரிதாஸ் பகீர் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.