Close Menu
    What's Hot

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!. சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு!
    தமிழ்நாடு

    நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!. சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு!

    Editor web3By Editor web3May 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Muthukalai Wife Passes Away
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் நடிகரான முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47), சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9 மணியளவில் காலமானார்.

    மாலதி அவர்களுக்குத் தலையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக, கடந்த 19 நாட்களாகச் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தன்னிடம் இருந்த ஒட்டுமொத்தப் பணத்தையும் மனைவியின் சிகிச்சைக்காகச் செலவழித்த நடிகர் முத்துக்காளை, மேற்கொண்டு மருத்துவச் செலவுகளுக்குப் பணமின்றித் தவித்தார்.

    இதையடுத்து, தனது மனைவியைக் காப்பாற்ற நிதியுதவி செய்யுமாறு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு வீடியோ மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தத் தகவல் அறிந்தவுடன், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் நேரில் சென்று மருத்துவ உதவிகளை மேற்கொண்டனர். எனினும், மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருந்த மாலதி, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார்.

    கடந்த ஆண்டுதான் தனது மகன் பள்ளிப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதோடு, வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷின் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினார் முத்துக்காளை. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள் மனைவியின் இந்தத் திடீர் மரணம் அவரை நிலைகுலையச் செய்துள்ளது.

    மாலதியின் உடல் அஞ்சலிக்குப் பிறகு, இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, சங்கம்பட்டி (திருக்கோதையாபுரம்) கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. மாலதியின் இறுதிச் சடங்குகள் இன்று இரவு அவரது சொந்த ஊரிலேயே நடைபெறவுள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவரலாற்றுச் சரிவில் இந்திய ரூபாய்… காரணம் என்ன?
    Next Article ஆட்சியரகத்தில் அரங்கேறிய தீக்குளிப்பு –  மாறும் ஆட்சிகள் – மாறாத காட்சிகள்
    Editor web3
    • Website

    Related Posts

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    July 4, 2026

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    July 4, 2026

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    திருப்பூர் : கர்ப்பிணி காதல் மனைவியை கொலை செய்த கணவர்..! தானும் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன?

    அரசு வழக்கறிஞர் நியமனம்; அமைச்சர் புஸ்சி ஆனந்த் ரூ.120 கோடி வசூல்வேட்டை – யூ டியூபர் மாரிதாஸ் பகீர் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.