Close Menu
    What's Hot

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மூட்டைக்கு ரூ. 50 லஞ்சம் – அதிகாரிகளை மாத்துங்க – கொந்தளிக்கும் விவசாயிகள்; முதலமைச்சருக்கு கோரிக்கை!
    தமிழ்நாடு

    மூட்டைக்கு ரூ. 50 லஞ்சம் – அதிகாரிகளை மாத்துங்க – கொந்தளிக்கும் விவசாயிகள்; முதலமைச்சருக்கு கோரிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksMay 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 agri
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்பதாகவும், அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும் கூடி விவசாயிகள் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

     ஆற்காடு அடுத்த ஆயிலம் பகுதியில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்மணிகளைக் கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் விவசாயிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தும் கடந்த இரண்டு மாதங்களாக கொள்முதல் செய்யப்படாமல் சுமார் 10 ஆயிரம் மூட்டைகள் நிலைய வளாகத்தில் தேங்கி கிடப்பதாக கூறப்படுகிறது.

    012 agri A

    மேலும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு 50 முதல் 60 வரை அதிகாரிகள்  வசூலிப்பதாகவும் அதேபோல் முறையாக வரிசையில் மூட்டைகளை அனுப்பாமல் சில நபர்களிடம் லஞ்சம் பெற்று அனுப்புவதாகவும் எழுந்த புகாரின் பேரில் விவசாயிகள் ஏராளமானோர் நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும்  அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் லாரியை சிறை பிடித்து கொள்முதல் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    012 agri B

    விவசாயிகள் கூறுகையில், “ தற்போது அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகள்  மழையில் அபாயம் உள்ளதாகவும்.

    அதேபோல் நெல்லை நிரப்பதற்கு முறையாக சாக்குப் பைகள் வரவில்லை என அதிகாரிகள் அலட்சியத்துடன் பதில் தருவதாகவும் அநாகரீகத்துடன் பேசுவதாகவும் குற்றம்சாட்டினர்.
    முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் விஜய்யும், இங்குள்ள தவெக எம்.எல்.ஏவும்  முறைகேடு அதிகாரிகளை மாற்றி  நெல்மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’… தலைமை நீதிபதியை கலாய்க்கும் எக்ஸ் தள பக்கம்!
    Next Article கோவையில் கொடூரம்!. 12 வயது சிறுவன் அடித்துக் கொலை!. சக நண்பர்கள் 2 பேர் கைது!
    Editor TN Talks

    Related Posts

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    May 18, 2026

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    May 18, 2026

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    யானைகள் சண்டையில் சென்னை பெண் உயிரிழப்பு!. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்!

    அதிமுக என்ற ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள்; பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வோம்!. இபிஎஸ்!.

    Trending Posts

    ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    May 18, 2026

    கேரளத்தில் மகளிருக்கு இலவச பஸ் பயணம்!. பதவியேற்ற முதல் நாளிலேயே 3 முக்கிய அறிவிப்புகள்!

    May 18, 2026

    நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!. சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு!

    May 18, 2026

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    May 18, 2026

    பள்ளிகள் திறப்பு!. அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.