Close Menu
    What's Hot

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லி அரசியலில் தடம் பதிக்கும் தவெக! மாநிலங்களவை எம்.பி.-யை தேர்வு செய்ய விஜய் தீவிரம்
    Featured

    டெல்லி அரசியலில் தடம் பதிக்கும் தவெக! மாநிலங்களவை எம்.பி.-யை தேர்வு செய்ய விஜய் தீவிரம்

    Editor web1By Editor web1May 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிரடியாக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ள தவெக, அடுத்ததாக டெல்லி அரசியலில் களமிறங்க தீவிரம் காட்டி வருகிறது.

    Vijay 2 1

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தநிலையில், தனது அடுத்தகட்ட நகர்வாக டெல்லி அரசியலிலும் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் தங்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதில் அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிரமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வைச் சேர்ந்த சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அவர் வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே, அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த ஒரு இடத்திற்கு மாநிலங்களவை எம்.பி.யை நியமனம் செய்ய விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

    Vijay 4

    இதன்காரணமாக தமிழகத்தில் இருந்து விரைவில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கான தேர்தலில், சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் தவெக-வுக்கு எம்.பி. இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

    தவெக சார்பில் நாடாளுமன்றத்தின் மேலவைக்குச் செல்லப்போகும் முதல் மாநிலங்களவை எம்.பி. யார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே பலமாக எழுந்துள்ளது.

    இதற்காக தவெக மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்புகளில் உள்ள சிலரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    டெல்லி நாடாளுமன்ற அரசியலில் தடம் பதிப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையில், அக்கட்சியின் தலைவர் விஜய் சில முக்கியமான மற்றும் தீவிரமான அறிவுரைகளை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், மாநில நலனுக்காகவும் டெல்லியில் நமது குரல் கம்பீரமாக ஒலிக்க வேண்டும் என்றும் அதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் விஜய் கூறியதாக தெரிகிறது.

    ராஜ்யசபா எம்.பி. பதவியைக் குறி வைத்து கட்சியில் தேவையற்ற பிரிவினையோ அல்லது கோஷ்டி பூசலோ எழக்கூடாது என்றும் பதவி என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பே தவிர, சுய லாபத்திற்கானதாக இருக்கக் கூடாது என்றும் நிர்வாகிகளுக்கு விஜய் அறிவிரை வழங்கியதாக கூறப்படுகிறது. எனவே, தேர்வு செய்யப்படும் நபர் யாராக இருந்தாலும், அனைவரும் ஒற்றுமையுடன் கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் என்று தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Vijay 4 1

    தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும் தவெக தனது முதல் பிரதிநிதியை அனுப்பப் போவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!
    Next Article கேஸ் நிரப்பும் பணியின்போது வெடித்து சிதறிய ஏசி!. ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!
    Editor web1
    • Website

    Related Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    July 4, 2026

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.