Close Menu
    What's Hot

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!
    தமிழ்நாடு

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    Editor web3By Editor web3May 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tirupur Gutkha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் தீபா சத்யன் மேற்பார்வையில், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் போலீசார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், கடையிலிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமுல்குமார் (23) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் பெங்களூரிலிருந்து குட்கா பொருட்களைக் கடத்தி வந்து விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    அமுல்குமாரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், வட மாநிலத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெருமளவில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டுள்ளது அம்பலமானது. உடனடியாக அந்த வீட்டிற்குச் சென்று போலீசார் சோதனையிட்டபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த சட்டவிரோத விற்பனையில் தொடர்புடைய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தானேஸ்வரன் (27) என்ற மற்றொரு இளைஞரையும் போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, அமுல்குமார் மற்றும் தானேஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்த வீரபாண்டி போலீசார், இவர்களின் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரான் மீதான தாக்குதல் முடிவு தற்காலிகமாக ஒத்தி வைப்பு: டிரம்ப்
    Next Article டெல்லி அரசியலில் தடம் பதிக்கும் தவெக! மாநிலங்களவை எம்.பி.-யை தேர்வு செய்ய விஜய் தீவிரம்
    Editor web3
    • Website

    Related Posts

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    May 19, 2026

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    May 19, 2026

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 

    கேஸ் நிரப்பும் பணியின்போது வெடித்து சிதறிய ஏசி!. ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!

    Trending Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026

    காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 

    May 19, 2026

    கேஸ் நிரப்பும் பணியின்போது வெடித்து சிதறிய ஏசி!. ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!

    May 19, 2026

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.