Close Menu
    What's Hot

    அரசுப் பள்ளியில் முட்டைகளை ஆட்டைய போட்ட இருவர்..!! கொந்தளித்த பெற்றோர்..!!

    இயக்குநர் இமயம்… பாரதிராஜா மறைவு!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    தவெகவின் மிகப்பெரிய வெற்றி.. இதை நாங்க எதிர்பாக்கல..!! அமித்ஷா பேச்சு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»காரீப் பருவத்துக்கு தேவையான உரங்களை வழங்கிடுக – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் கடிதம்
    Featured

    காரீப் பருவத்துக்கு தேவையான உரங்களை வழங்கிடுக – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் கடிதம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 cim modi 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026-ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்குத் தேவையான யூரியா மற்றும் டிஏபி உள்ளிட்ட உரங்களை தங்கு தடையின்றி தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர் என்றும், 48.27 இலட்சம் எக்டரில் நிகர சாகுபடியும், 62.25 இலட்சம் எக்டரில் மொத்த சாகுபடியும் மேற்கொள்ளப்படுவதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    வேளாண்மை- உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த தனது ஆய்வின்போது, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரத்தேவையில், 39,001 மெட்ரிக் டன் யூரியா, 28,607 மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 24,235 மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகிய உரங்கள் உர உற்பத்தியாளர்களால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்து அதற்கான விவரங்களையும் கடிதத்துடன் அனுப்பியுள்ளார்.

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதாலும், காரீப் பருவத்தில் அதிகபட்ச பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ள நிலையில், யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இத்தருணத்தில், உரப்பற்றாக்குறை ஏற்பட்டால் மாநிலத்தின் உண உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்  கடிதத்தில் தெரிவித்துள்ள முதலமைச்சர்,

    நடப்பு காரீப் பருவத்தில் 25 இலட்சம் எக்டரில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, 3.83 இலட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.05 இலட்சம் மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 0.83 இலட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியவற்றை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கிட உரிய அலுவலர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி குறித்த நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் நாளை 5000 மருந்துக் கடைகள் திறந்திருக்கும் – அமைச்சர் அருண்ராஜ்
    Next Article அதிமுக ஆதரவைப் பெற்றால் தவெகவுக்கு வழங்கும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை –சிபிஎம் அதிரடி.
    Editor TN Talks

    Related Posts

    அரசுப் பள்ளியில் முட்டைகளை ஆட்டைய போட்ட இருவர்..!! கொந்தளித்த பெற்றோர்..!!

    June 10, 2026

    இயக்குநர் இமயம்… பாரதிராஜா மறைவு!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    June 10, 2026

    தவெகவின் மிகப்பெரிய வெற்றி.. இதை நாங்க எதிர்பாக்கல..!! அமித்ஷா பேச்சு..!!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசுப் பள்ளியில் முட்டைகளை ஆட்டைய போட்ட இருவர்..!! கொந்தளித்த பெற்றோர்..!!

    இயக்குநர் இமயம்… பாரதிராஜா மறைவு!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    தவெகவின் மிகப்பெரிய வெற்றி.. இதை நாங்க எதிர்பாக்கல..!! அமித்ஷா பேச்சு..!!

    ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவு..!! கண்ணீருடன் நேரில் ஓடோடி வரும் தமிழ் திரையுலகம்..!!

    திமுக கள ஆய்வு குழு!. அறிக்கை தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.