Close Menu
    What's Hot

    3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்..!! அமெரிக்க தூதருக்கு மத்திய அரசு சம்மன்..!!

    Work From Home-லாம் பழசு… இனி “Work From Bike” தான் புதுசு! வைரலாகும் ஹைதராபாத் வாலிபர்!

    ஈரானின் பொருளாதார ரகசியம்… 100 நாள் போரிலும் வீழாமல் இருப்பது எப்படி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தவெக அமைச்சரவை!. 7 தலித் அமைச்சர்கள், 4 பெண் அமைச்சர்கள், மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு இடம்!
    தமிழ்நாடு

    தவெக அமைச்சரவை!. 7 தலித் அமைச்சர்கள், 4 பெண் அமைச்சர்கள், மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு இடம்!

    Editor web3By Editor web3May 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CM VIjay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை 33 உறுப்பினர்களுடன் முழுமையடைந்துள்ள நிலையில், இந்த புதிய அமைச்சரவையின் பட்டியல் சமூகப் பிரதிநிதித்துவம் மற்றும் தவெக-வின் அடித்தளமாக விளங்கிய நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    அமைச்சரவையில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதோடு, அடித்தட்டு மக்களுக்காக உழைத்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் பெரிய அளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    7 தலித் அமைச்சர்கள்: புதிய அமைச்சரவையில் பட்டியலின (SC) சமூகத்திற்குப் பலமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பி. விஸ்வநாதனுடன் சேர்த்து மொத்தம் 7 தலித் முகங்கள் அமைச்சரவையில் தடம் பதித்துள்ளனர்.

    ராஜ்மோகன் (பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்)

    காந்தி ராஜ் (அரக்கோணம்)

    தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்)

    கமலி (அவிநாசி)

    லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்)

    மதன் ராஜா (ஒட்டப்பிடாரம்)

    பி. விஸ்வநாதன் (மேலூர் – காங்கிரஸ்)

    பெண் அமைச்சர்கள்: பெண் உரிமை மற்றும் சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 4 பெண் அமைச்சர்கள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் சிறுபான்மையின சமூகத்திற்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

    விஜயலட்சுமி – குமாரபாளையம்

    கீர்த்தனா – சிவகாசி ( தொழிற்துறை அமைச்சர்)

    கமலி – அந்தியூர்

    ஜெகதீஸ்வரி – இராஜபாளையம்

    சிறுபான்மையினர் மற்றும் முக்கிய அமைச்சர்கள்:

    முகமது பர்வேஸ் – அறந்தாங்கி

    ஸ்ரீநாத் – தூத்துக்குடி

    மரிய வில்சன் – ஆர்.கே.நகர்

    விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள்: கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே பல ஆண்டுகளாகத் தவெக தலைவர் விஜய்யுடன் களத்தில் நின்ற 16 விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் தற்போதைய அமைச்சரவையில் அமைச்சர்களாக உயர்ந்துள்ளனர். தொண்டர்களுக்கு முன்னுரிமை என்ற தவெக-வின் கொள்கைக்கு இது சான்றாக அமைந்துள்ளது.

    கும்பகோணம் – வினோத்

    கடலூர் – ராஜ்குமார்

    அரக்கோணம் – காந்திராஜ்

    ராஜபாளையம் – ஜெகதீஸ்வரி

    ஈரோடு கிழக்கு – விஜய பாலாஜி

    சேலம் தெற்கு – தமிழன் பார்த்திபன்

    ஸ்ரீரங்கம் – ரமேஷ்

    ஸ்ரீபெரும்புதூர் – தென்னரசு

    கோவை வடக்கு – சம்பத் குமார்

    அறந்தாங்கி – பர்வேஸ்

    தாம்பரம் – சரத் குமார்

    கிணத்துக்கடவு – விக்னேஷ்

    குமாரபாளையம் – விஜயலட்சுமி

    அனைத்து மாவட்டங்கள், சமூகங்கள், மற்றும் பெண்களுக்குச் சம வாய்ப்பு வழங்கி, மக்கள் மன்றத்தின் உழைப்பாளர்களையும் அரவணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 33 பேர் கொண்ட தவெக கூட்டணி அமைச்சரவை தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசீனாவில் வெளுத்து வாங்கிய கனமழை..! உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக உயர்வு..!
    Next Article அமைச்சரவையில் இடம்பெறாத மாவட்டங்கள்..! தவெக தோற்ற தொகுதிக்கு யார் அமைச்சர்?
    Editor web3
    • Website

    Related Posts

    3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்..!! அமெரிக்க தூதருக்கு மத்திய அரசு சம்மன்..!!

    June 13, 2026

    Work From Home-லாம் பழசு… இனி “Work From Bike” தான் புதுசு! வைரலாகும் ஹைதராபாத் வாலிபர்!

    June 13, 2026

    ஈரானின் பொருளாதார ரகசியம்… 100 நாள் போரிலும் வீழாமல் இருப்பது எப்படி?

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்..!! அமெரிக்க தூதருக்கு மத்திய அரசு சம்மன்..!!

    Work From Home-லாம் பழசு… இனி “Work From Bike” தான் புதுசு! வைரலாகும் ஹைதராபாத் வாலிபர்!

    ஈரானின் பொருளாதார ரகசியம்… 100 நாள் போரிலும் வீழாமல் இருப்பது எப்படி?

    ஐயோ அது நான் இல்லை… ஏமாந்துறாதீங்க – நடிகை மீனாட்சி சவுத்ரி

    ஆவின் ‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா..?? தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.