Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எடப்பாடிக்கு ‘செக்’… வேலுமணி தரப்பின் இரட்டை வியூகம்… பரபரக்கும் அதிமுக வட்டாரம்!
    Featured

    எடப்பாடிக்கு ‘செக்’… வேலுமணி தரப்பின் இரட்டை வியூகம்… பரபரக்கும் அதிமுக வட்டாரம்!

    Editor web1By Editor web1May 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS SP Velumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியல் சதுரங்க ஆட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வியூகங்கள் மாறி வருகின்றன. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் அதிமுகவின் அதிருப்தி அணி, இப்போது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்திற்கே ‘செக்’ வைக்கும் அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.

    சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்தில், தமிழக அரசியலின் தற்போதைய போக்கைத் தீர்மானிக்கக்கூடிய மிக முக்கியமானதொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இரண்டு மிக முக்கியமான ‘ஸ்கெட்ச்கள்’ போடப்பட்டுள்ளன.

    1400 கையெழுத்துகள்… எடப்பாடிக்கு சட்ட நெருக்கடி!

    கூட்டத்தின் முதல் அதிரடியாக, அதிமுகவின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டையும் எடப்பாடியிடமிருந்து பறிப்பதற்கான சட்டப்பூர்வ ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தங்களுக்கு ஆதரவாக உள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக, தமிழகம் முழுவதிலும் உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடம் இருந்து 1400 படிவங்களில் முறைப்படி கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    கட்சியின் சட்ட விதிகளின்படி, குறிப்பிட்ட சதவீத உறுப்பினர்கள் கோரினால் பொதுக்குழுவைக் கூட்டுவது கட்டாயமாகும். இந்த 1,400 படிவங்களையும் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி, உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்ட நெருக்கடி கொடுக்க வேலுமணி தரப்பு முடிவு செய்துள்ளது. பொதுக்குழுவைக் கூட்டினால் எடப்பாடியின் பதவிக்கே ஆபத்து, கூட்ட மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு என எடப்பாடியைச் சுற்றிலும் சட்ட வேலி அமைத்துள்ளது சி.வி.சண்முகம் தரப்பு.

    சபாநாயகர் சந்திப்பு… எடப்பாடிக்கு ’செக்’

    இந்த ஆட்டத்தின் அடுத்த கட்டமாக, வேலுமணி தரப்பு தங்களின் பார்வையைத் தமிழகச் சட்டமன்றத்தை நோக்கித் திருப்பியுள்ளது. தங்களுக்கு ஆதரவாக இருக்கும் 25 சட்டமன்ற உறுப்பினர்களின்  பலத்தை வைத்து, சட்டமன்றத்தில் ஒரு புதிய சட்டமன்றக் குழுத் தலைவர் மற்றும் கொறடாவை நியமிக்க அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

    இதற்காக, மிக விரைவில் 25 எம்.எல்.ஏ-க்களின் கையொப்பமிட்ட கடிதத்துடன் சபாநாயகரை நேரில் சந்திக்க எஸ்.பி.வேலுமணி தரப்பு திட்டமிட்டுள்ளது. சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தைப் பறிப்பதும், தங்களை ஒரு தனி அங்கீகாரம் பெற்ற அணியாக அறிவிக்கக் கோருவதுமே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருக்கும் எனத் டெரிகிம். இது நடந்தால், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் பலம் வெறும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குக் சுருங்கிவிடும்.

    இரட்டை வியூகம்

    தற்போதைய தவெக அமைச்சரவையில் வேலுமணி தரப்பு இணைவதற்கு, வெளியில் இருந்து தவெக-வை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  ஆனாலும், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி நீடிக்கத் தங்கள் தரப்பு  எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால்தான், சபாநாயகர் மூலம் தங்களைத் தனி அணியாக அங்கீகரித்துக் கொண்டால், தவெக அரசு தங்களை எக்காலத்திலும் கைவிட முடியாது என்றும், அதே நேரத்தில் எடப்பாடியை முழுமையாகத் தனிமைப்படுத்தலாம் என்றும் இரட்டை வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது.

    அதிமுக வரலாற்றில் எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய உட்கட்சிச் சவால் உருவாகியுள்ளது. 1,400 பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துகள் மற்றும் சபாநாயகரைச் சந்திக்கத் தயாராகும் 25 எம்.எல்.ஏ-க்களின் படைவகுப்பு என எடப்பாடிக்கு வைக்கப்பட்ட ‘செக்’ மிக வலுவானதாக உள்ளது. சபாநாயகரின் கைகளில் இருக்கும் அந்த ஒரு கடிதம், தமிழக அரசியலிலும், அதிமுகவின் எதிர்காலத்திலும் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தப் போவது உறுதி!

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article5 நாட்டு தலைவர்களுக்கு வித்தியாச பரிசுகளை வழங்கிய பிரதமர் மோடி..!! என்ன தெரியுமா..??
    Next Article தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை… அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
    Editor web1
    • Website

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.