Close Menu
    What's Hot

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    மனு கொடுக்க குவிந்த மக்கள்… வெளியே வந்த முதல்வர் மனுப் பெட்டி!

    3 இடங்களில் ரேடார் கருவிகள்.. தொடர் கண்காணிப்பு..!! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»”திமுகவுக்கு கடின காலங்களில் தோள் கொடுத்தவர் திருமா!” – பட்டியல் போட்டு விசிக பதிலடி
    Featured

    ”திமுகவுக்கு கடின காலங்களில் தோள் கொடுத்தவர் திருமா!” – பட்டியல் போட்டு விசிக பதிலடி

    Editor web1By Editor web1May 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thiruma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றதை விமர்சித்து சமூக வலைதளத்தில்  திமுக எம்.பி. ராசா பதிவிட்ட கவிதை கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்ட நிலையில், அதனை பின்னர் நீக்கினார்.

    இந்த நிலையில், கடந்த காலங்களில் திமுகவுக்கு தங்கள் கட்சி எந்த அளவுக்கு திமுகவுக்கு உறுதுணையாக இருந்தது என்பதை  விளக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    கலைஞர் மறைவுக்குப் பின்…

    தலைவர் கலைஞர் மறைந்து, மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்ற அந்த இக்கட்டான காலகட்டத்தில், அவர்தான் தமிழ்நாட்டின் அடுத்த முகவரியாக வர வேண்டும் என்று முதன்முதலில் பொதுமேடைகளில் முழங்கியவர் நம் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன். திமுகவின் தலைமை மாற்றத்தின் போது தார்மீக பலமாய் நின்றது விசிக!

    2019 நாடாளுமன்றத் தேர்தல்: தனிச்சின்னம் துணிச்சல்!

    2019-ல் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பலமே விசிக-வின் வாக்கு வங்கிதான். கூட்டணி தர்மத்திற்காக, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல், ‘பானை’ சின்னத்தை வாங்கி, தேர்தல் களத்தில் விசிக காட்டிய உழைப்புதான் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்ல அஸ்திவாரமிட்டது.

    2021 சட்டமன்றத் தேர்தல்: ஸ்டாலின் முதல்வராக விசிக உழைப்பு!

    மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக அரியணை ஏறுவதற்குக் காரணமே வட மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களிலும் விசிகவின் வாக்குகள் அப்படியே திமுகவுக்குப் போய் சேர்ந்ததுதான்.

    6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்ட போதிலும், “பாசிசத்தை வீழ்த்த வேண்டும், ஸ்டாலின் முதல்வராக வேண்டும்” என்ற ஒற்றை நோக்கோடு சிறுத்தைகள் இரத்தம் சிந்தி உழைத்தனர்.

    விசிக போட்டியிட்ட 6-ல் 4 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் நின்று வென்று, திமுகவின் வெற்றிக்கு அரணாக நின்றது!

     சனாதன எதிர்ப்புப் போர் – திமுகவுக்குக் கிடைத்த கேடயம்!

    பாஜக மற்றும் சனாதன சக்திகள் திமுக அரசைத் தீவிரமாகத் தாக்கிய போதெல்லாம், அதற்கு முதன்முதலில் களத்தில் நின்று அறிவுப்பூர்வமாகவும் ஆக்ரோஷமாகவும் பதிலடி கொடுத்தது விசிக தான். திமுக அரசுக்கு அரசியல் ரீதியாக எழும் நெருக்கடிகளுக்கெல்லாம் தத்துவார்த்த கேடயமாக நின்றவர் தலைவர் திருமாவளவன்!

    வாக்கு மட்டும் எங்களுடையது, ஆட்சிப் பீடம் மட்டும் உங்களுடையதா?

    திமுகவின் மிகக் கடினமான நேரங்களில் அரணாக நின்ற விசிக, இன்று “அதிகாரத்தில் பங்கு” என்ற தன் கொள்கைக்காக தவெக-வோடு கரம் கோர்த்ததும் உங்களுக்கு வலிக்கிறதா?

    கூட்டணிக் கட்சிகளை வெறும் ‘வாக்கு வங்கி’ ஏணியாக நினைத்த உங்களின் சுயநல அரசியலுக்கு வரலாறு மிக விரைவில் பாடம் புகட்டும்! எனப் பதிவிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆ.ராசா மன்னிப்பு கேட்க ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்!
    Next Article கட்சியில் நயினார் நாகேந்திரன் மகனுக்கு முக்கியத்துவம்… அப்செட்டில் பாஜக சீனியர்கள்!
    Editor web1
    • Website

    Related Posts

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    June 2, 2026

    மனு கொடுக்க குவிந்த மக்கள்… வெளியே வந்த முதல்வர் மனுப் பெட்டி!

    June 2, 2026

    3 இடங்களில் ரேடார் கருவிகள்.. தொடர் கண்காணிப்பு..!! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    மனு கொடுக்க குவிந்த மக்கள்… வெளியே வந்த முதல்வர் மனுப் பெட்டி!

    3 இடங்களில் ரேடார் கருவிகள்.. தொடர் கண்காணிப்பு..!! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா..!

    சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு –  இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – ஆதார் கட்டாயம்

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.