Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    தமிழக அரசியலில் சாதி-மத பிரிவினை..!! முதல்வர் விஜய்க்கு அப்பாவு சரமாரி கேள்விகள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கட்சியில் நயினார் நாகேந்திரன் மகனுக்கு முக்கியத்துவம்… அப்செட்டில் பாஜக சீனியர்கள்!
    Featured

    கட்சியில் நயினார் நாகேந்திரன் மகனுக்கு முக்கியத்துவம்… அப்செட்டில் பாஜக சீனியர்கள்!

    Editor web1By Editor web1May 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Nainar Nagendran son
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது கட்சியினர் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அவரது மகன் நயினார் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட பதவிகள் வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன.

    கடந்த ஆண்டு, அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது அதிமுகவுடன் இணக்கமான கூட்டணி உத்தி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை பாஜக தலைமை நீக்கியது. அதற்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கட்சி செயல்பட்டு வந்த நிலையில், இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

    முந்தைய சட்டமன்றத்தில் 4 உறுப்பினர்களுடன் இருந்த பாஜக, இப்போது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினருடன் திருப்தி அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் தனது மகன் நயினார் பாலாஜிக்கு மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வழங்கினார். இந்த நடவடிக்கை கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்ப்பை சந்தித்தது.

    பலரும் இதை வாரிசு அரசியல் என்று விமர்சித்தனர். தொண்டர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அதிருப்தி இன்னும் அடங்காத நிலையில், மத்திய அரசின் 12 ஆண்டுகால ஆட்சி ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவடையும் சூழலில், பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத்  திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக மாநில அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த மாநிலக் குழுவிலும் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது கட்சியினர் இடையே மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே தேர்தல் தோல்வி மற்றும் தந்தை-மகன் பதவி பங்கீடு குறித்த விமர்சனங்கள் இருக்கும் நிலையில், இந்தப் புதிய நடவடிக்கை கட்சியினர் இடையே, அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் மிகவும் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இத்தகைய சூழலில், பாஜக தலைமை இந்த விவகாரங்களை எப்படி கையாளப் போகிறது என்பதை கட்சியினர் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”திமுகவுக்கு கடின காலங்களில் தோள் கொடுத்தவர் திருமா!” – பட்டியல் போட்டு விசிக பதிலடி
    Next Article கல் குவாரிகளில் சோதனைக்கு உத்தரவு: அமைச்சர் பிரபு அதிரடி!
    Editor web1
    • Website

    Related Posts

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    June 2, 2026

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    June 2, 2026

    தமிழக அரசியலில் சாதி-மத பிரிவினை..!! முதல்வர் விஜய்க்கு அப்பாவு சரமாரி கேள்விகள்..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    தமிழக அரசியலில் சாதி-மத பிரிவினை..!! முதல்வர் விஜய்க்கு அப்பாவு சரமாரி கேள்விகள்..!!

    எதிர்த்து நின்னா கொலைதான் பதிலா..?? இதுதான் ஆட்சி மாற்றமா..?? கொந்தளித்த இபிஎஸ்..!!

    6 மாசம் தான் டைம்..!! தமிழக நகரங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தும் முயற்சி..!! தவெக அரசு அதிரடி..!!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.