Close Menu
    What's Hot

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நகைக் கடன் சந்தையை ஆளும் தென்னிந்தியா!. தமிழ்நாடு தான் ‘நம்பர் 1’!.
    Featured

    நகைக் கடன் சந்தையை ஆளும் தென்னிந்தியா!. தமிழ்நாடு தான் ‘நம்பர் 1’!.

    Editor web3By Editor web3May 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold loan tamilnadu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொருளாதாரம், தொழில், சேவை மற்றும் உற்பத்தி எனப் பல துறைகளிலும் அசுர வளர்ச்சி கண்டு வரும் தமிழ்நாடு, தற்போது மற்றொரு புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவு தங்கக் கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. குறிப்பாக, டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சம் ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தைக் கடந்தது. இந்த அதிரடி விலை உயர்வால் மக்கள் புதிய நகைகள் வாங்குவது குறைந்தாலும், தங்கக் கடன் சந்தைக்கு இது மிகப்பெரிய ஊக்கமளித்துள்ளது.

    தங்கத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதால், பழைய நகைகளை அடகு வைக்கும்போது முன்பு கிடைத்ததை விட தற்போது அதிக தொகை கடனாகக் கிடைக்கிறது. இதனால் மக்கள் தங்களது பணத் தேவைகளுக்கு மற்ற கடன்களை விட தங்கக் கடன்களையே அதிகம் நாடுகின்றனர். தேசிய அளவில் நிலுவையில் உள்ள ஒட்டுமொத்த தங்கக் கடன்களில் 75 சதவீதம் தென்னிந்திய மாநிலங்களில்தான் உள்ளன என்பது ஆச்சரியமூட்டும் தகவலாகும்.

    மார்ச் 2026 நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 18.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கடன்கள் நிலுவையில் உள்ளன. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய 5 தென்னிந்திய மாநிலங்களின் பங்கு மட்டும் 13.94 லட்சம் கோடி ரூபாயாகும்.

    அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தான் அதிகமான தங்க கடன் வாங்கி இருக்கின்றனர். தமிழ்நாட்டில் நிலுவையில் இருக்கக்கூடிய தங்க நகை கடனின் மதிப்பு 5.96 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அடுத்ததாக ஆந்திராவில் 3.08 லட்சம் கோடி ரூபாயும், கர்நாடகாவில் 1.81 லட்சம் கோடியும், தெலுங்கானாவில் 1.6 லட்சம் கோடி ரூபாயும் கேரளாவில் 1.45 லட்சம் கோடி ரூபாயும் நிலுவையில் உள்ள தங்க கடன்களின் மதிப்பாக உள்ளது.

    பொதுமக்களுக்கு தங்கக் கடன் லாபகரமாக அமைவது போலவே, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் இது மிகவும் பாதுகாப்பான ஒரு கடனாக அமைகிறது. வாடிக்கையாளர் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டாலும், தங்கத்தின் மூலம் நஷ்டத்தைத் தவிர்த்துவிடலாம் என்பதால், மற்ற கடன்களை விட தங்கக் கடன்களுக்கே வங்கிகள் அதிக முன்னுரிமை அளிக்கின்றன.

    அந்த வகையில் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு பிரிவாக தங்க நகை கடன் பிரிவு இருக்கிறது. ஓராண்டிலேயே இது 50% உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக தனி நபர் கடன்கள் 12.9% வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றன வீட்டு கடன்களை பொறுத்தவரை 9.4 சதவீதம் என ஒரு நிலையான வளர்ச்சியை காட்டி இருக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொழில்நுட்பப் போருக்குத் தயாராகும் எதிர்காலம்: முப்படைத் தளபதி எச்சரிக்கை!
    Next Article எபோலா அச்சுறுத்தல்!. இந்தியர்கள் இந்த நாடுகளுக்கு பயணம் செய்யாதீர்கள்!. மத்திய அரசு அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    July 17, 2026

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    July 17, 2026

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.