Close Menu
    What's Hot

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»80% மழை அச்சுறுத்தல்!. ரிசர்வ் டே இல்லாத நாக்-அவுட்!. RCB-GT போட்டி ரத்தானால் யாருக்கு பைனல் வாய்ப்பு?
    விளையாட்டு

    80% மழை அச்சுறுத்தல்!. ரிசர்வ் டே இல்லாத நாக்-அவுட்!. RCB-GT போட்டி ரத்தானால் யாருக்கு பைனல் வாய்ப்பு?

    Editor web3By Editor web3May 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rcb vs gt
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான இறுதிப் கட்டப் போட்டிகள் தற்பொழுது தொடங்கியுள்ள நிலையில், இன்றைய குவாலிஃபையர் 1 போட்டி குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

    ஐபிஎல் 2026 தொடரின் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச் சுற்று இன்று தர்மசாலாவில் உள்ள ஹெச்பிசிஏ (HPCA) மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மெகா பலப்பரீட்சையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் மோதவிருக்கின்றன.

    இருப்பினும், தர்மசாலாவில் இன்று பலத்த மழை பெய்ய 80 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கைகள் தெரிவிப்பதால், இப்போட்டி தடையின்றி நடக்குமா என்ற பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.

    மழை தொடர்ந்து பெய்து, ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாக ரத்து செய்யப்பட்டால், ஐபிஎல் விதிமுறைப்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.

    நடப்புத் தொடரின் லீக் சுற்றுகளின் முடிவில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுமே தலா 14 போட்டிகளில் விளையாடி 18 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. ஆனால், குஜராத் அணியை விட சிறந்த நெட் ரன் ரேட் வைத்திருப்பதால் ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

    ஐபிஎல் விதிமுறைகளின்படி குவாலிஃபையர் 1, எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2 ஆகிய போட்டிகளுக்கு ‘ரிசர்வ் டே’ கிடையாது (இறுதிப்போட்டிக்கு மட்டுமே உண்டு). இதனால், நாக்-அவுட் ஆட்டம் மழையால் ரத்தாகும் பட்சத்தில், லீக் சுற்றின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அது அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் ஆர்சிபிக்கு நேரடியாக பைனல் டிக்கெட் கிடைக்கும். தோற்கும் அணிக்கு குவாலிஃபையர் 2-வில் விளையாட மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்பதால், குஜராத் அணி அந்தப் போட்டிக்குச் செல்லும்.

    மழை காரணமாக 20 ஓவர்கள் கொண்ட முழுமையான ஆட்டத்தை நடத்த முடியாமல் போனால், நடுவர்கள் ஓவர்களைக் குறைத்து ஆட்டத்தை நடத்த முயல்வார்கள். அதுவும் சாத்தியமில்லாத பட்சத்தில், வெற்றியாளரைத் தீர்மானிக்க ஒரு ‘சூப்பர் ஓவர்’  மட்டும் நடத்த ஐபிஎல் விதிகளில் இடமுண்டு. சூப்பர் ஓவரும் நடத்த முடியாத அளவிற்கு மழை நீடித்தால் மட்டுமே புள்ளிப்பட்டியல் கணக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    நடப்பு சாம்பியனான ஆர்சிபி மற்றும் 2022 சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுமே தங்களது இரண்டாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் தீவிர முனைப்பில் உள்ளன. இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய தலா இரண்டு லீக் போட்டிகளில் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 எனச் சமநிலையில் உள்ளன. ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றிலும் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 8 போட்டிகளில் தலா 4 வெற்றிகளுடன் 4-4 எனச் சமபலத்துடன் விளங்குகின்றன.

    தற்பொழுது தர்மசாலாவில் நிலவும் 80 சதவீத மழை அச்சுறுத்தலால் ஆர்சிபி மற்றும் குஜராத் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல-  சிபிஎம் விமர்சனம்!!
    Next Article சிறுபான்மை அரசின் முதல்வர் ; அறிவிலி அமைச்சர்; – நயினார் நாகேந்திரன் ஏகபோக தாக்குதல்!
    Editor web3
    • Website

    Related Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.