Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»6 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை – சபாநாயகர் உறுதி அளித்ததாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி  தகவல்
    Featured

    6 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை – சபாநாயகர் உறுதி அளித்ததாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி  தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017 agri
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராஜினாமா செய்த 6 அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த மரதகம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகிய  6 பேர்  தங்களின் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதனால் அவர்கள் மீது கட்சி காவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் சபாநாயகர் இடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சபாநாயகர் தரப்பிலிருந்து சில விளக்கங்கள் கேட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில், அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து பதில் கடிதத்தை வழங்கினர்.

    பின்னர் சட்டபேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவுக்கும் தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்.

    குதிரை பேரத்தின் மூலம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள அவர்கள் மீது கட்சி தடை தாவல் சட்டத்தின் படி 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் இடம் கடிதம் கொடுத்தோம்.

    புகார் மனுவின் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். நாங்கள் கொடுத்த புகார் மனுவின் மீது சில விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்திருந்தார்.சபாநாயகர் அவர்கள் கேட்ட விளக்கத்திற்கு பதில் கடிதம் கொடுத்துள்ளோம் என்றார்.

    அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கூறுகையில், இசக்கி சுப்பையா தரப்பில் எம்எல்ஏக்களிடம் பெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக சொன்னார்கள். அது குறித்து எங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம்.எங்களுடைய கட்சியின் பொதுச் செயலாளர் அவர்கள்தான் கட்சியின் கொறடா, சட்டமன்ற குழு தலைவர்களை நியமனம் செய்ய முடியும் என்ற  அடிப்படையில் சபாநாயகர் இடம் விளக்கம் அளித்துள்ளோம்.

    என்ன காரணத்திற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தோம் என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை. சொந்த காரணத்திற்காக என்றால் என்ன காரணம்?.

    சீட்டு வாங்கும்போது அதிமுகவின் மீது அதிருப்தி இல்லை என்றால் தற்போது ஏன் அதிருப்தி. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவில்லை.அமைச்சர் பதவி கிடைக்கும் என தமிழக வெற்றி கழகத்தில் இணைகின்றனர் என்றனர்.

    ஏற்கனவே அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டனர், தற்போது அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறீர்கள் என்ற செய்தியாளரின் கேள்விக்கு,

    சட்டமன்ற உறுப்பினராக இருந்து உள்ளார்கள் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளோம். இப்படியே தொடர்ந்து ராஜினாமா செய்ய விட முடியுமா?

    கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளும் மனக்கசப்புகளும் சில நாட்கள் தான் இருக்கும். அது பின்னர் சரி ஆகிவிடும். தற்போது நடைபெறுவது பங்காளி சண்டை தான். கட்சியை விட்டுப் போனவர்கள் வருவதும் வராததும் அவரவர் விருப்பம். எல்லா கட்சியிலும் மனக்கசப்பு இருக்கும் என்றார்.

    Agri Krishnamurthy AIADMK Anti-Defection Law speaker Tamil Nadu Assembly
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி
    Next Article திருப்பூரில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பரபரப்பு… உருவபொம்மை எரிப்பு; மாணவர்கள் கைது!
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.