Close Menu
    What's Hot

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»BREAKING| அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு!. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
    Featured

    BREAKING| அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு!. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

    Editor web3By Editor web3May 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    school open
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 4-ஆம் தேதி புதன்கிழமை அன்று  திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    முன்னதாக, 2026-2027 கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பில், 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 4-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில், பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி திறப்பு தேதியை மாற்றக் கோரி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வந்தன. வெவ்வேறு வகுப்புகளில் பிள்ளைகள் படிக்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்கவும், நிர்வாக வசதிக்காகவும் அனைத்து வகுப்புகளையும் ஒரே நாளில் திறக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    மேலும், ஜூன் முதல் வாரத்தில் நிலவக்கூடிய பருவமழைக்கு முந்தைய வானிலை மாற்றங்கள், பரவலான மழைப்பொழிவு, ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் தாக்கம் குறித்தும் அரசு ஆலோசித்தது. இதனுடன், பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக மாணவர்களுக்கான குடிநீர் வசதி, சுகாதார வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பள்ளி வளாகத் தூய்மைப் பணிகள் போன்ற முன்னேற்பாடுகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அரசு ஆய்வு செய்தது.

    இவை அனைத்தையும் கவனமாகப் பரிசீலித்த தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளும் 1 முதல் 12-ஆம் வகுப்புகள் வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஜூன் 4  (புதன்கிழமை) அன்று பள்ளிகள் திறக்கப்படும்.

    பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் வகையில் அனைத்துத் தேவையான ஆயத்தப் பணிகளையும் முடிக்க வேண்டும் என்று அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றுன் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 50 வயது உறவினருக்கு ஆயுள் தண்டனை
    Next Article அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல-  சிபிஎம் விமர்சனம்!!
    Editor web3
    • Website

    Related Posts

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    June 21, 2026

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    June 21, 2026

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    “திமுக-அதிமுக ஒன்றானாலும் ஆச்சரியமில்லை”… பரபரப்பைக் கிளப்பும் சிபிஎம் சண்முகம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.