Close Menu
    What's Hot

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சிறுபான்மை அரசின் முதல்வர் ; அறிவிலி அமைச்சர்; – நயினார் நாகேந்திரன் ஏகபோக தாக்குதல்!
    Featured

    சிறுபான்மை அரசின் முதல்வர் ; அறிவிலி அமைச்சர்; – நயினார் நாகேந்திரன் ஏகபோக தாக்குதல்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    016 bjp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, தான் ஒரு தூய சக்தி என்றும், மற்றக் கட்சியினர் தீய சக்தி என்றும் பிரச்சாரம் செய்தார். அப்படியான நிலையில், 108 தொகுதிகளில் வெற்றிப்பெற்று முதல்வர் ஆக முடியாமல் அவர் சாடிய திமுக வின் தோழமைக்கட்சிகளுடன் பேசி ஆதரவுப் பெற்று முதல்வர் பதவிக்கு வந்தார்.

    அது மட்டும்மல்லாமல் அஇஅதிமுக வில் வெற்றிப்பெற்ற சட்டமன்ற உறுபினர்களையும், திருட்டு தனமாக அரசியல் புரோக்கர்களை வைத்து, குதிரை பேரம் பேசி, சட்டமன்றத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாக தனது வலுவை நிரூபித்தார்.

    நேற்றைக்கு அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினமா செய்ய வைத்துவிட்டு, தன்னுடைய கட்சியிலும் சேர்த்துக் கொண்டார். இதில் என்ன நியாயம் இருக்கிறது!
    ராஜினாமா செய்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடந்தால், மக்களின் வரிப்பணம்தானே வீணாகிறது என்று முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் அறியாமல் இருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

    வேடிக்கை என்னவென்றால், நேற்று ராஜினாமா செய்த 3 அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், “முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி 10 நாட்களிலேயே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியைப்போல இருக்கிறது” என்றும் கூறி, இதற்காகத்தான் தவெக கட்சியில் சேர்ந்தோம் என்றும் கூறியுள்ளார்கள். இது எவ்வளவு வேடிக்கையான, முட்டாள்தனமான பேச்சு.

    இவர்கள் எப்படி தலைமைச்செயலகத்தில் ஒரு அமைச்சர் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் சேரமுடியும்? தலைமைச் செயலகம் என்ன தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகமா? இந்த அடிப்படைக்கூட தெரியாமல் ஒரு அறிவிலி அமைச்சர் இருக்கிறாரே?

    மேலும், இன்ஸ்டாகிராம் Influencers களை வைத்து, ஏமாற்றி, எளிதாக ஆட்சிக்கு வந்த விஜய்க்கு எப்படி அரசியல் பக்குவம் இருக்கும்? அதுமட்டுமல்லாது குதிரைபேரத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்ற ஜோசப் விஜய் எப்படி தூயசக்தி ஆவார்?

    ஜோசப் விஜய்யின் ஆட்சி 15 நாட்களிலே அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சியைப்போன்று இருக்கிறது என்று சொல்லுகிறார்களே? 15 நாட்களில் தமிழகத்தில் நடந்த அவலங்களைப் பாருங்கள்.

    ஜோசப் விஜய் ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் 266 குற்றச்சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.

    45 படுகொலைகள் நடந்துள்ளன.
    66 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குகெதிரான குற்றங்கள் நடந்துள்ளன.
    74 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன.
    82 ஊழல் குற்றங்கள் நடந்துள்ளன.

    “போதைப்பொருள்களை ஒழிப்பேன்” என்று சொன்னார் ஜோசப் விஜய். இன்றுவரை பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் போதைப்பொருள்கள் நடமாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறதே!

    அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்கடன் தள்ளுபடி செய்கிறேன் என்று சொன்ன ஜோசப் விஜய், விவசாய பெருங்குடி மக்களையும் ஏமாற்றி இருக்கிறார். அவர் அறிவித்தப்படி முழுமையாக பயிர்கடன் தள்ளுபடி செய்யவில்லை. இது அவர்கொடுத்த வாக்குறுதியை மீறியதாகும்.

    மேலும், கடந்த 2 நாட்களிலேயே ஜோசப் விஜய்யின் சிறுபான்மை ஆட்சியில், திருவண்ணாமலையில் 14 வயது சிறுமி,
    கோவையில் 10 வயது சிறுமி, விழுப்புரம் வண்டிப்பாளையத்தில் 11 வயது சிறுமி,
    மதுரையில் 10 ஆம் வகுப்பு மாணவி, நாகப்பட்டினத்தில் 80 வயது மூதாட்டி ஆகியோர் கொடூரமாக பாலியல் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லுவாரா முதல்வர்?

    இவரது ஆட்சியில் நடக்கும் அவலங்களைப் பார்த்தால், மகாகவி பாரதி பாடிய, “நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த
    நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்” என்ற துயரப்பாடல்தான் நினைவிற்கு வருகிறது.

    இப்படியாக, தமிழக மக்களை வருத்தம் அடையச் செய்யும் அளவிற்கு, சிறுபான்மை அரசின் முதல்வர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும்  ஜோசப் விஜய்  தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடையும்படி செய்து விட்டார் என்பது வேதனைக்குரியது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article80% மழை அச்சுறுத்தல்!. ரிசர்வ் டே இல்லாத நாக்-அவுட்!. RCB-GT போட்டி ரத்தானால் யாருக்கு பைனல் வாய்ப்பு?
    Next Article கோவை சிறுமி கொலை; சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வழக்கு தாக்கல்
    Editor TN Talks

    Related Posts

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    July 22, 2026

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    July 22, 2026

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    திருப்பத்தூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் செம்மரக்கட்டைகள்; வனத்துறையினர் பறிமுதல்

    “மாணவர்கள் மீதான தடியடி வீடியோக்களை பார்க்க நேரமில்லை”!. அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.