Close Menu
    What's Hot

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    நேற்று தொடங்கிய ED ரெய்டு.. இன்று அதிரடி நிறைவு..!! முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

    பாஜகவில் இணையும் திமுக… என்ன செய்யப்போகிறது அதிமுக? – கே.சி.பழனிசாமி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்
    Featured

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 keerthana
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தவெக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

    ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக, டெல்லியில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையும், அவர்களைக் கைது செய்திருப்பதும் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களை மீறும் செயலாகும். கருத்துச் சுதந்திரத்தையும், அமைதியான முறையில் போராடும் உரிமையையும் பறிப்பது ஜனநாயக நாட்டிற்கு அழகல்ல என அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளார்.

    மேலும், மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி  அவர்களையும் காவலில் எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் குரலை ஒடுக்குவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவது ஜனநாயகத்தின் மாண்பை சிதைக்கும் செயலாகும் எனச் சாடியுள்ளார்.

    நீட் தேர்வு என்பது வெறும் நுழைவுத் தேர்வு அல்ல; அது சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் பிரச்சினையாகும். இதனை உணர்ந்து, நீட் விலக்கை வலியுறுத்தி போராடி வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள். மாணவர்களின் நலனே முதன்மை என்ற நிலைப்பாட்டில், அவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கிறது எனக் கூறியுள்ள அமைச்சர் கீர்த்தனா,

    மாணவர்களின் குரலை அடக்குவதற்குப் பதிலாக, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உரிய தீர்வை வழங்குவதே ஜனநாயக அரசின் கடமையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    அத்துடன்,  கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவித்து, ஜனநாயக உரிமைகளை மதித்து ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    Central Government Delhi Protests Democracy Tamil Nadu Politics TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பத்தூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் செம்மரக்கட்டைகள்; வனத்துறையினர் பறிமுதல்
    Next Article நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!
    Editor TN Talks

    Related Posts

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    July 22, 2026

    நேற்று தொடங்கிய ED ரெய்டு.. இன்று அதிரடி நிறைவு..!! முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

    July 22, 2026

    பாஜகவில் இணையும் திமுக… என்ன செய்யப்போகிறது அதிமுக? – கே.சி.பழனிசாமி ஆதங்கம்

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    நேற்று தொடங்கிய ED ரெய்டு.. இன்று அதிரடி நிறைவு..!! முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

    பாஜகவில் இணையும் திமுக… என்ன செய்யப்போகிறது அதிமுக? – கே.சி.பழனிசாமி ஆதங்கம்

    CJP போராட்டத்தின் உண்மையான நோக்கம் நாட்டை குழப்புவதே..!! ஸ்ரீதர் வேம்பு பாய்ச்சல்..!!

    போர்க்களமான டெல்லி..! ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு..! மாணிக்கம் எம்.பி கண்டன அறிக்கை..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.