Close Menu
    What's Hot

    சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்..!! விஜய் குறித்து பிரேமலதா பேச்சு..!!

    டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் மைய அரசின் காட்டுமிராண்டித் தனம் – வைகோ கடும் கண்டனம்

    நேற்று பிரதமர் வீட்டில் போராட்டம்!. இன்று கருப்பு உடையில் நாடாளுமன்றம் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவை சிறுமி கொலை; சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வழக்கு தாக்கல்
    தமிழ்நாடு

    கோவை சிறுமி கொலை; சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வழக்கு தாக்கல்

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017 kovai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க மூத்த காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கக் உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழ்நாடு தலைவர் பி.சொக்கலிங்கம் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் பி.என்.எஸ். சட்டத்தின் கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பலியான சிறுமியின் தாய் அளித்த பேட்டியில் சிறுமி காணாமல் போனதும், காவல்துறையினரை அணுகியபோது குழந்தை பாதுகாப்பாக தங்கள் காவலில் இருப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்; ஆனால் அதற்கு மாறாக சிறுமி கொலை செய்யப்பட்டு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது; இதனால் இந்த வழக்கை சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி, சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டதைப் போல இந்த வழக்கிலும், சுதந்திரமான, வெளிப்படையான விசாரணைக்கு காவல்துறை மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்; இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்கில் பரவிவரும் வீடியோக்கள் புலன் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுவதால், இந்த வழக்கு தொடர்பாக செய்திகள் வெளியிட அனைத்து வகையான ஊடகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிறுபான்மை அரசின் முதல்வர் ; அறிவிலி அமைச்சர்; – நயினார் நாகேந்திரன் ஏகபோக தாக்குதல்!
    Next Article அதிமுக எம்.எல்.ஏக்களை தவெகவில் இணைப்பது ஏற்புடையதல்ல – திருமாவளவன் அதிரடி
    Editor TN Talks

    Related Posts

    சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்..!! விஜய் குறித்து பிரேமலதா பேச்சு..!!

    July 22, 2026

    டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் மைய அரசின் காட்டுமிராண்டித் தனம் – வைகோ கடும் கண்டனம்

    July 22, 2026

    பெங்களூருவிலிருந்து கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்தல்!. கோவையில் 5 பேர் கும்பல் கூண்டோடு கைது!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்..!! விஜய் குறித்து பிரேமலதா பேச்சு..!!

    டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் மைய அரசின் காட்டுமிராண்டித் தனம் – வைகோ கடும் கண்டனம்

    நேற்று பிரதமர் வீட்டில் போராட்டம்!. இன்று கருப்பு உடையில் நாடாளுமன்றம் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள்!

    ”மாணவர்களின் போராட்டமல்ல, நாடாளுமன்றத்திலும் மாணவர்களிடமும் நடப்பதுதான் ஜனநாயக விரோதம்” – பிரியங்கா காந்தி கடும் தாக்கு  

    பெங்களூருவிலிருந்து கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்தல்!. கோவையில் 5 பேர் கும்பல் கூண்டோடு கைது!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.