Close Menu
    What's Hot

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    திருப்பத்தூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் செம்மரக்கட்டைகள்; வனத்துறையினர் பறிமுதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் மைய அரசின் காட்டுமிராண்டித் தனம் – வைகோ கடும் கண்டனம்
    Featured

    டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் மைய அரசின் காட்டுமிராண்டித் தனம் – வைகோ கடும் கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2026Updated:July 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 vaiko
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புது டில்லியில் மைய அரசின் ஏவுதலில் மாணவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்தியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    நீட் தேர்வை இரத்து செய்யக் கோரியும், நீட் கேள்வித் தாள் வெளியானதற்குக் காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரியும் டில்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 ஆம் நாள் இலட்சக்கணக்கான மாணவர்களும், கரப்பான் பூச்சி இயக்கத்தினரும் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை குண்டாந்தடிகளைக் கொண்டு போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது. கண்ணீர்ப் புகை பிரயோகிக்கப்பட்டது. பல மாணவ – மாணவிகள் படுகாயமுற்றனர். டில்லி நகரம் ஒரு இராணுவ கூடாரம் போல் காட்சி அளித்தது.

    தடியடியால் காயப்பட்ட மாணவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரால் ஆங்காங்கு பாதுகாக்கப்பட்டனர். தடியடியில் காயமுற்ற மாணவர்கள் டில்லியில் மண்டி ஹவுஸ் என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள சுர்ஜித் பவனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பேபி அவர்களும், அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் அம்மையாரும், நானும் ஆங்காங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே சுர்ஜித் பவனுக்குச் சென்றோம். தடியடியில் காயப்பட்ட மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் தோள் கொடுப்போம் – துணை நிற்போம் என்று உறுதி கூறினோம்.

    007 vaiko 1

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த மாணவ  – மாணவியர் காலவரையறையற்ற உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்டிருந்ததால் அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வேண்டி தோழர் பேபி அவர்கள், அவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாநிலை அறப்போரை முடித்து வைத்தார்.

    நான் அம் மாணவர்களிடையே போராட்டத்தை ஆதரித்து உரையாற்றும்போது,

    இந்த மாணவர் போராட்டம் நியாயமான காரணங்களுக்காக வெடித்து எழுந்த உரிமைப் போராட்டமாகும். தர்மேந்திர பிரதான் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். நீட் தேர்வு முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டுமூ, நீட் கேள்வித் தாள் வெளியானதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவ – மாணவிகள் மீது அராஜக தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினரை உடனடியான பணி நீக்கம் செய்ய வேண்டும். இப்போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கிவிட முடியாது என மத்திய அரசுக்கு எச்சரிக்கிறேன்” என்று குறிப்பிட்டேன்.

    கரப்பான் பூச்சி இயக்கத்தினரும், எண்ணற்ற இளைஞர்களும் இப்போராட்டத்தில் எதற்கும் அஞ்சாமல் உறுதியாக நின்று போராடுகிறார்கள். இப்போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழம் தன்னுடைய முழுமையான ஆதரவை தெரிவிப்பதுடன், மத்திய அரசுக்கும், டெல்லி மாநில அரசுக்கும், காவல்துறைக்கும் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, உரிமைக்காக, நியாயத்திற்காக, நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்பதற்காக கிளர்ந்தெழும் போராட்டத்தை காவல்துறையைக் கொண்டும், துணை இராணுவத்தைக் கொண்டும் அடக்க மேலும் முனைந்தால் அது புரட்சியாக வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    Central Government Delhi Student Protest MDMK Tamil Nadu Politics Vaiko
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநேற்று பிரதமர் வீட்டில் போராட்டம்!. இன்று கருப்பு உடையில் நாடாளுமன்றம் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள்!
    Next Article சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்..!! விஜய் குறித்து பிரேமலதா பேச்சு..!!
    Editor TN Talks

    Related Posts

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    July 22, 2026

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    July 22, 2026

    திருப்பத்தூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் செம்மரக்கட்டைகள்; வனத்துறையினர் பறிமுதல்

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    திருப்பத்தூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் செம்மரக்கட்டைகள்; வனத்துறையினர் பறிமுதல்

    “மாணவர்கள் மீதான தடியடி வீடியோக்களை பார்க்க நேரமில்லை”!. அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு!.

    வீசிங் வரனுமா? இந்த பஸ்ஸில் ஏறுங்க..! ரூ.1,600 கொடுத்து நோயை வாங்கனுமா? 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.