Close Menu
    What's Hot

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்..!! விஜய் குறித்து பிரேமலதா பேச்சு..!!
    Featured

    சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்..!! விஜய் குறித்து பிரேமலதா பேச்சு..!!

    editor5By editor5July 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 34 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருத்தணி: தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தேர்தல் வெற்றிக்கு நேர்த்திக்கடன் என்று வேண்டியபடி, வெள்ளி வேலை காணிக்கையாகச் செலுத்தினார். கையில் வெள்ளி வேலுடன் மலைக்கோயிலை வலம் வந்து வழிபட்ட அவர், பின்னர் தங்கத் தேரை இழுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோயிலில் இருந்து வெளியேறிய பிரேமலதா நிருபர்களிடம் பல்வேறு அரசியல், சமூகப் பிரச்சினைகள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ.வை இரவோடு இரவாகக் கைது செய்யாமல், எச்சரித்து அனுப்பியிருக்கலாம் என்று கூறினார். இந்த நடவடிக்கை அரசின் வன்முறை மனப்பான்மையை வெளிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.

    தமிழக அரசு கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு, குடிநீர், உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கில் யார் தவறு செய்தாலும் தண்டனை தப்பாது என்றும், முருகரிடம் இருந்து தப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.

    வரும் பட்ஜெட்டில் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தினார். நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாகவும், மின்கட்டண உயர்வைக் குறைக்க முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    மேகதாது அணைக்கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஒகேனக்கல்லில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். விவசாயிகளின் நலனுக்காக விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    மேலும், சினிமாவில் விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த முதலமைச்சர் விஜய், நிஜ வாழ்க்கையிலும் அதை நிரூபிக்க வேண்டும் என்று பிரேமலதா கூறினார். அவ்வாறு செய்தால்தான் அவர் உண்மையான ஹீரோவாக மக்களால் போற்றப்படுவார்; இல்லையெனில் அது வெறும் கண்துடைப்பு மட்டுமே என்று தெரிவித்தார்.

    cm vijay premalatha vijayakanth
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் மைய அரசின் காட்டுமிராண்டித் தனம் – வைகோ கடும் கண்டனம்
    Next Article வறட்சியால் விளைச்சல் குறைவு எதிரொலி…. தமிழகம் முழுவதும் கர்நாடக பொன்னி அரிசி விலை கிடுகிடு உயர்வு!
    editor5

    Related Posts

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    July 22, 2026

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    July 22, 2026

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    திருப்பத்தூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் செம்மரக்கட்டைகள்; வனத்துறையினர் பறிமுதல்

    “மாணவர்கள் மீதான தடியடி வீடியோக்களை பார்க்க நேரமில்லை”!. அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.