Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»முதல்வரின் ஒப்புதலோடுதான் சொல்கிறாரா?. பல்கலை.வேந்தர் விவகாரத்தில் அமைச்சரை சாடிய ரவிக்குமார் எம்.பி!
    Featured

    முதல்வரின் ஒப்புதலோடுதான் சொல்கிறாரா?. பல்கலை.வேந்தர் விவகாரத்தில் அமைச்சரை சாடிய ரவிக்குமார் எம்.பி!

    Editor web3By Editor web3May 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    minister vishwanathan mp ravikumar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் இருப்பாரா அல்லது ஆளுநர் இருப்பாரா என்ற விவாதத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ள கருத்து புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

    மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனிடம், பல்கலைக்கழக வேந்தர் பதவி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், “எங்களது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், கொள்கை ரீதியான முடிவுகளை முதலமைச்சரே எடுப்பார். கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நடைமுறைகளை நாங்களும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்கிற கட்டாயம் எங்களுக்குக் கிடையாது.

    முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் உயர்கல்வித் துறையின் வழிகாட்டுதல்களைப் பரிசீலித்து முறைப்படுத்துவார். முதலமைச்சரின் ஆலோசனையின்படி இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றார்.  அதாவது, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற சட்டப் பூர்வ நிலைப்பாடு எடுக்கப்பட்டது. இதனால் அப்போதைய அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீண்டகாலமாக அதிகார மோதல் நீடித்து வந்தது. இந்தச் சூழலில், முந்தைய அரசின் அந்த கொள்கை முடிவை தற்போதைய அரசு பின்பற்ற வேண்டியதில்லை என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறியிருப்பதுதான் தற்போதைய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

    https://x.com/WriterRavikumar/status/2059520333963723241

    அமைச்சரின் இந்த கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் தனது ‘எக்ஸ்’  பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்கவேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைபாட்டைப் பின்பற்றவேண்டியதில்லை” என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராட்டிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும். மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் இதை முதலமைச்சர் விஜய்யின் ஒப்புதலோடுதான் சொல்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

    மாநில உரிமை சார்ந்த இந்த முக்கிய விவகாரத்தில் ஆளுங்கூட்டணிக்குள்ளேயே முரண்பட்ட கருத்துகள் வெளியாகி வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரும் இணைப்பு..!! மீண்டும் உருவாகும் அதிமுக கோட்டை..!! தனி ரூட்டில் செல்லும் சி.வி.சண்முகம்..!!
    Next Article நாளையோட கத்திரி வெயிலுக்கு TATA.. BYE BYE..!! மக்கள் சற்று நிம்மதி..!!
    Editor web3
    • Website

    Related Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    May 30, 2026

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.