Close Menu
    What's Hot

    தலைமைச் செயலாளருக்கு பதவி நீட்டிப்பு!. மேலும் 6 மாதங்கள் தொடர்கிறார் சாய் குமார் ஐஏஎஸ்!

    கருப்பை வாய் கேன்சருக்கு கிடைக்கப்போகும் தீர்வு..!! கர்நாடக அரசு அதிரடி ஆக்ஷன்..!!

    தடை.. அதை உடை..!! ஒருவழியா.. ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை!. கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!
    தமிழ்நாடு

    கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை!. கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!

    Editor web3By Editor web3May 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kovai Leopard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொள்ளாச்சி அருகே விவசாயத் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த கன்றுக்குட்டியைக் கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த துரை என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் ஆழியார் புளியங்கண்டி பகுதியில் உள்ளது. இந்தத் தோட்டத்தில் புளியங்கண்டியைச் சேர்ந்த மைக்கேல் (50) என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் விவசாயப் பணிகளுடன் சொந்தமாக ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகிறார்.

    வழக்கம்போல் நேற்று மாலை கால்நடைகளைத் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து வைத்துவிட்டு மைக்கேல் வீட்டிற்குச் சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது, பட்டியில் மாடு மட்டுமே இருந்துள்ளது; கன்றுக்குட்டியைக் காணவில்லை. இதனால் தேடிப் பார்த்தபோது, பட்டியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கன்றுக்குட்டி பாதியளவு விலங்கால் உண்ணப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து ஆழியார் வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பதிவாகியிருந்த விலங்கின் காலடித்தடங்களை ஆய்வு செய்ததில், அது சிறுத்தையின் காலடித்தடங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. சிறுத்தை தாக்கியதாலேயே கன்றுக்குட்டி உயிரிழந்தது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்தது.

    வனப்பகுதியையொட்டி உள்ள விளைநிலங்களுக்குள் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களையும், கால்நடைகளையும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து பலமுறை வனத்துறையினரிடம் புகார் அளித்தும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    புளியங்கண்டி கிராமம் அடர்ந்த வனப்பகுதிக்கு மிக அருகில் உள்ள குக்கிராமம் என்பதால், தற்பொழுது சிறுத்தை நடமாட்டம் காரணமாகக் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பவே பெற்றோர் கடும் பீதியடைந்துள்ளனர்.

    எனவே, தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் இந்தச் சிறுத்தையை வனத்துறையினர் உடனடியாகக் கூண்டு வைத்துப் பிடித்து, மனித நடமாட்டமில்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட வேண்டும் என கிராம மக்கள் அவசரமாக வலியுறுத்தியுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவரலாற்றுப் பிழையை சரி செய்யுமா ஜோசப் விஜய் அரசு? – எட்டயபுரம் மன்னர் வாரிசின் விடா முயற்சி!
    Next Article 69% இடஒதுக்கீடு: எந்த நிலையிலும் பாதுகாக்க வேண்டும்..!! ராமதாஸ் வலியுறுத்தல்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    தலைமைச் செயலாளருக்கு பதவி நீட்டிப்பு!. மேலும் 6 மாதங்கள் தொடர்கிறார் சாய் குமார் ஐஏஎஸ்!

    July 15, 2026

    எத்தனை பொய் கதைகளை பரப்பினாலும்… கோயில் நிலங்களை பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக நிற்கும்!. அமைச்சர் ரமேஷ்!

    July 15, 2026

    திருச்செந்தூர் ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு ரத்து: ஆகஸ்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தலைமைச் செயலாளருக்கு பதவி நீட்டிப்பு!. மேலும் 6 மாதங்கள் தொடர்கிறார் சாய் குமார் ஐஏஎஸ்!

    கருப்பை வாய் கேன்சருக்கு கிடைக்கப்போகும் தீர்வு..!! கர்நாடக அரசு அதிரடி ஆக்ஷன்..!!

    தடை.. அதை உடை..!! ஒருவழியா.. ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு..!!

    எத்தனை பொய் கதைகளை பரப்பினாலும்… கோயில் நிலங்களை பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக நிற்கும்!. அமைச்சர் ரமேஷ்!

    திருச்செந்தூர் ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு ரத்து: ஆகஸ்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.