Close Menu
    What's Hot

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தோல்வியை ஆராய காங்கிரசில் விசாரணைக்குழு– 60 நாட்களுக்குள் ஆய்வறிக்கை தாக்கல்
    அரசியல்

    தோல்வியை ஆராய காங்கிரசில் விசாரணைக்குழு– 60 நாட்களுக்குள் ஆய்வறிக்கை தாக்கல்

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 congress
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யும் குழுக் கூட்டம் நடைபெற்றது.

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் விசாரணை மற்றும் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இதயத்துல்லா நியமிக்கப் பட்டுள்ளார். குழு உறுப்பினர்களாக சொர்ணா சேதுராமன், சி.வி. மெய்யப்பன் மற்றும் கமலிகா காமராஜர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    **இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;-

    எங்கள் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் தேர்தலில் ஏற்பட்ட தொடர் தோல்விகள் குறித்தும், அடுத்த கட்டமாக கட்சி ரீதியாக எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் தொண்டர்களிடம் கருத்து கேட்க உள்ளோம்.

    005 congress A

    தொண்டர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க தலைமையிடம் முறையிடுவோம். மேலும், கட்சி தலைமை எங்களுக்கு 60 நாள் அவகாசம் வழங்கியுள்ளது. அந்த காலக்கெடுவுக்குள் தொண்டர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் மற்றும் கருத்துகளை தலைமையிடம் எடுத்துரைப்போம்.

    எங்களின் பயணத்தின் போது தொண்டர்கள் நேரில் சந்தித்து கட்சியில் உள்ள நிறை, குறைகள் குறித்து தெரிவிக்கலாம். அனைத்து கட்சிகளிலும் உள்கட்சி பிரச்சினைகள் இருப்பது இயல்பான ஒன்றுதான். 50 ஆண்டுகள் பழமையான கட்சியிலிருந்தும், 3 ஆண்டுகள் தொடங்கிய கட்சியிலிருந்தும் இத்தகைய பிரச்சினைகள் இருந்து கொண்டே தான் வருகின்றன” என்றார்.

    அப்போது, “மூன்று ஆண்டுகள் தொடங்கிய கட்சி என்று தமிழக வெற்றிக் கழகத்தைக் குறிப்பிட்டு கூறுகிறீர்களா?” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு பேசவில்லை. பொதுவாக ஒரு கருத்தை மட்டுமே தெரிவித்தேன்.

    எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாக உள்ளது. மற்ற கட்சிகள் குறித்து பேசும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என்று தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமிரட்டும் புதிய எபோலா வைரஸ்!. தடுப்பூசி கண்டுபிடித்து ரஷ்ய விஞ்ஞானிகள் அசத்தல்!
    Next Article அடுத்த டுவிஸ்ட்!. இபிஎஸ் தலைமையில் தொடர மாட்டேன்!. சி.வி.சண்முகம் திட்டவட்டம்?
    Editor TN Talks

    Related Posts

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    July 15, 2026

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    July 15, 2026

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.