Close Menu
    What's Hot

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மிரட்டும் புதிய எபோலா வைரஸ்!. தடுப்பூசி கண்டுபிடித்து ரஷ்ய விஞ்ஞானிகள் அசத்தல்!
    Featured

    மிரட்டும் புதிய எபோலா வைரஸ்!. தடுப்பூசி கண்டுபிடித்து ரஷ்ய விஞ்ஞானிகள் அசத்தல்!

    Editor web3By Editor web3May 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ebola vaccine
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதிவேகமாக பரவி வரும் மாற்று வகை எபோலா வைரஸைக் கட்டுப்படுத்த, ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் புதிய தடுப்பூசி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

    காங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) எனப்படும் புதிய மரபணு மாற்றமடைந்த எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி காங்கோவில் இதுவரை 204 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்று அண்டை நாடான தெற்கு சூடான் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது முற்றிலும் புதிய வகை உருமாறிய வைரஸ் என்பதால், இதற்கென பிரத்யேகமான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது முறையான மருத்துவ சிகிச்சைகளோ இதுவரை உலகளவில் இல்லாமல் இருந்தது.

    காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் எபோலா பாதிப்பு கட்டுப்பாடின்றி அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த மாத 17-ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவித்தது. மேலும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மக்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அந்தப் பகுதிகளில் இருந்து வரும் பயணிகளைத் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

    இந்த நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த புண்டிபுக்யோ எபோலா வைரஸை முறியடிப்பதற்கான புதிய தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக, தென்னாப்பிரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தடுப்பூசி ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் சுகாதார நெருக்கடியைக் குறைக்கப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் முறைகேடு; ராகுல்காந்தி கேள்வி
    Next Article தோல்வியை ஆராய காங்கிரசில் விசாரணைக்குழு– 60 நாட்களுக்குள் ஆய்வறிக்கை தாக்கல்
    Editor web3
    • Website

    Related Posts

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    July 15, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    July 15, 2026

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.