அதிமுக கொறடா அக்ரிகிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,
1996-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியபோது, கட்சி மாறியவர்களை உதிர்ந்த ரோமம் என புரட்சித் தலைவி குறிப்பிட்டார். இன்றைக்கு அதிமுகவை விட்டு விலகிச் செல்பவர்கள், அம்மா சொன்ன உதிர்ந்த ரோமங்கள் என்பதுதான் எங்களுக்கு நினைவுக்கு வருகிறது.
திமுகவில் இருந்தும், பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளவும் துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கும்படி கேட்டபோதும் எடப்பாடி பழனிசாமி கட்சியில் சேர்க்க மறுத்துவிட்டதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா அதிமுகவைச் சேர்ந்தவர்களை தவெகவுக்கு இழுத்து குதிரைப் பேரம் செய்து கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து இதுபோல் தவறுகளை செய்து கொண்டிருந்தா; குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கோருவோம் எனக் கூறினார்.
அதிமுக திமுகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டதாகவும் இதுதான் குதிரைப் பேரம் என்றும் ஆதவ் அர்ஜுனாவும், செங்கோட்டையனும் தவறான செய்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீரும் எண்ணெய்யும் இணையுமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழக மக்கள் அவர்களுக்கு 34% வாக்குகளை மட்டுமே அளித்திருக்கிறார்கள். 66% மக்கள் இன்றைக்கு இந்த அரசை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை எனக் கூறிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி,
தவெகவில் தற்போது அதிகாரப் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. விஜய்க்கு அடுத்த இடத்தில் யார் இருக்க வேண்டும் என்பதில் ஆனந்துக்கும், ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அரசு அலுவலகத்தில் வைத்தே ஆதவ் அர்ஜுனா மாற்றுக் கட்சியின்ரை தவெகவில் இணைத்துள்ளார். அது என்ன? அரசு தலைமை செயலகமா? அல்லது தமிழக வெற்றி கழகத்துடைய கட்சி அலுவலகமா என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். என்றார்.
இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நடப்பதை தூய ஆட்சி தருவேன் என்று சொன்ன முதலமைச்சராக இருக்கிற விஜய் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆட்சியை தக்கவைப்பதற்காக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நான்குபேரை, குதிரை பேரத்தின் மூலமாக பல கோடி ரூபாய் கைமாறியதன் காரணமாக இன்றைக்கு நீங்கள் ராஜினாமா செய்ய வைத்துள்ளீர்கள் என்பது நிதர்சனமான உண்மை.
வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் அந்த தேர்தலில் மக்கள் உங்களுக்கு சரியான பதிலடி தருவார்கள்.
பதவி ஆசை பிடித்தவர்கள் பதவியை எதிர்நோக்கி இருப்பவர்கள் தான் இன்றைக்கு கட்சி மாதிரி சென்று கொண்டிருக்கிறார்கள்.
பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையும் போது அதே பதவியைக் கொடுப்பதா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.
தமிழகத்திலே லாட்டரி சீட்டை விற்பனையை அம்மா தடை செய்தார்கள். அதற்கு பழிவாங்கவே, அதிமுகவை அழிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அந்தந்த தொகுதி மக்கள் கொதிப்படைந்திருக்கிறார்கள். இடைத்தேர்தல் வரும்பொழுது கூட்டணி கட்சியினுடைய தலைவர்கள் பொதுச்செயலாளருடன் இணைந்து பேசி நல்ல முடிவை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
