Close Menu
    What's Hot

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வடலூரில் பரபரப்பு..!! மண்ணுக்குள் புதைந்த பாதி உடல்.. இளம்பெண் சடலமாக மீட்பு..!!
    Featured

    வடலூரில் பரபரப்பு..!! மண்ணுக்குள் புதைந்த பாதி உடல்.. இளம்பெண் சடலமாக மீட்பு..!!

    editor5By editor5May 29, 2026Updated:May 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 28
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வடலூர் அருகே பாதி உடல் புதைந்த நிலையில் முகம் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாத இளம்பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர் மாவட்டம் வடலூரில் நெய்வேலி செல்லும் சாலையில் உள்ள கண்ணு தோப்பு பகுதியில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அப்பகுதியை உலுக்கியுள்ளது. விக்கரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணியின்போது, சாலையின் ஓரத்தில் மணல் மற்றும் மண் குவியலில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

    சம்பவ இடத்தில் மண் குவியலுக்கு அருகே பெண்ணின் கால் மற்றும் முகம் மட்டும் ஓரளவு வெளியே தெரிந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வடலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்த உடல் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுடையது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல் இரண்டு நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவ ஆய்வின் அடிப்படையில் போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.

    கொலை செய்யப்பட்டதா அல்லது பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு கொல்லப்பட்டதா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஆய்வு முடிந்த பின்னரே உடலைத் தோண்டி எடுக்கும் பணி தொடங்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் வந்து உடலை புதைத்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சாலை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. பெண் பாதுகாப்பு குறித்த கவலை மக்களிடையே எழுந்துள்ள நிலையில், சாலைப் பணிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என சிலர் விமர்சனம் செய்கின்றனர். போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், உடலின் அடையாளம் விரைவில் கண்டறியப்பட்டு, கொலையின் பின்னணி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்கள் வெளியானவுடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீட் முறைகேடு வழக்கு;  பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது தேசிய தேர்வு முகமை
    Next Article திருவோடு ஏந்திய விவசாயிகள்..!! வாக்குறுதி தவறிய விஜய் அரசுக்கு கண்டனம்..!!
    editor5

    Related Posts

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    July 14, 2026

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    July 14, 2026

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.