Close Menu
    What's Hot

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மக்கள் பிரதிநிதிகளுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம் – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
    Featured

    மக்கள் பிரதிநிதிகளுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம் – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 cdr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எம்.எல்.ஏ., அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம் என  சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்துக்காக கோயில் நடை0 தாமதமாக அடைக்கப்பட்டது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் மே 15ஆம் தேதி தரிசனம் செய்தார். வழக்கமாக கோவில் நடை மதியம் 12:45 மணிக்கு சாத்தப்படும். ஆனால் அமைச்சருக்காக கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் நிர்மல்குமாரின் தரிசனத்துக்கு பிறகே கோவில் நடை அடைக்கப்பட்டது.  அதேபோல, கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தார்.

    இந்நிலையில், கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி வி.லட்சுமி நாராயணன் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை செயலாளரின் அறிக்கையை தாக்கல் செய்த தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.வி.பாலசுப்ரமணியம், கோவில் நடை அடைக்கும் முன்பே அமைச்சர் கோவிலுக்குள் நுழைந்துவிட்டார்; அதற்கு கண்காணிப்பு கேமரா ஆதாரம் உள்ளது; அவரால் மற்ற பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை; கோவில் நடை பகல் ஒரு மணிக்கு தான் அடைக்கப்படும்; பகல் 12:50 மணிக்கு கோவிலுக்குள் நுழைந்துவிட்டதாக விளக்கம் அளித்தார்.

    இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் யாரையும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை என்றும், எம்.எல்.ஏ.-க்கள், அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசாலையில் பேனர் வைக்க எதிர்ப்பு!. ரோந்து காவலரின் கையை உடைத்த தவெக நிர்வாகிகள் கைது!
    Next Article ஜப்பானில் மாம்பழ இறக்குமதிக்கு தடை..! 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏன் இந்த நடவடிக்கை?
    Editor TN Talks

    Related Posts

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    July 14, 2026

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    July 14, 2026

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.