இயக்குனர் ஹெச். வினோத்தின் உதவி இயக்குனர் இயக்கி, நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னை தியாகராயநகரில் உள்ள ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் வாங்குவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஜனநாயகன் மட்டுமல்ல வேறு எந்த படத்தையும் அரசியல் காரணங்களுக்காக நிறுத்த முடியாது என கூறினார். ஜனநாயகன் படத்தில் முதலமைச்சர் விஜய் என்று வருமா என்ற கேள்விக்கு காலத்தை வென்ற அவர் எங்களுக்கு என்றுமே தளபதி என்றார்.
திரைத்துறை என்பது மிகப்பெரிய தலைவர்களை உருவாக்கிய தாய் மடி. அதனால் திரைத்துறை சார்ந்த எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதனை பரிசீலித்து நிர்வாக ரீதியாக சரி செய்யப்படும் என உறுதியளித்த அமைச்சர் ராஜ்மோகன், டிக்கெட் விலை என்றைக்குமே மக்களுக்கு சுமையாகிவிட கூடாது என்பதில் தமிழக அரசு தெளிவாக இருப்பதாகவும் அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு ஒரு விலை நிர்ணயம் செய்யப்படும் எனக் கூறினார்.
நான் ஆசைப்பட்டதெல்லாம் செய்வதற்கு அருமையான மனைவி, பெற்றோர்கள் கிடைத்தார்கள். அதேபோல் அரசியலிலும் நான் இருக்கேன் வா என்று சொல்வதுபோல் என்னுடைய அண்ணன் கிடைத்தார்.இந்த பொறுப்பை மக்களோடு தொடர்பு கொள்ளும் ஒரு கருவியாகவே தார் பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
விஜய்யின் பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போடுவதுதான் எங்களுடைய பிறந்தநாள் செலிப்ரேஷன். விஜய் படம் வெளியாவது ஒரு பண்டிகை அந்தப் பண்டிகை விரைவில் வரும் என்று நானும் நம்புகிறேன். பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எந்த பிரச்சனையா இருந்தாலும் என்னை அழைத்து அதை என்னவென்று பார் என முதலமைச்சர் விஜய் கூறுவார் எனத் தெரிவித்தார்.
தன்னை விமர்சனம் செய்த விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்போம். அவருடைய நம்பிக்கையும் பெறும்படி நன்றாக வேலை பார்த்து தளபதி பெயரை காப்பாற்றுவேன் என்றார்.
சிறிய பட்ஜெட் படங்கள் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சிறிய படங்கள் தான் தமிழ் சினிமாவின் ஆக்சிஜன். சிறிய பட்ஜெட் படங்களை ஒருபோதும் கைவிட மாட்டோம், நாங்கள் துணை நிற்போம் என்றார்.
சிறிய படங்களுக்கு பல ஆண்டுகளாகவே அதற்கான மானியம் கூட சரியாக சென்று சேரவில்லை. இதன் பிறகு முறையான ஒரு கமிட்டி அமைத்து எவையெல்லாம் சரி செய்ய முடியுமோ அதை கவனித்து விரைவில் ஒரு அறிவிப்பு வரும் எனக் கூறினார்.
