Close Menu
    What's Hot

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ச.ஜோசப் விஜய்யுடன் இணைந்தார் ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ் ; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும் தவெகவில் சங்கமம்
    Featured

    ச.ஜோசப் விஜய்யுடன் இணைந்தார் ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ் ; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும் தவெகவில் சங்கமம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 natraj b
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும்,  மயிலாப்பூர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். நடராஜ், தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

    தமிழக அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் நீண்ட அனுபவமிக்கவர் ஆர். நடராஜ்.  ஐபிஎஸ் அதிகாரியான இவர், 36 ஆண்டுகள் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். நவம்பர் 2003 முதல் ஏப்ரல் 2006 வரை சென்னை மாநகரக் காவல் ஆணையராக பொறுப்பு வகித்துள்ளார்.

     சிறைத்துறை டிஜிபி–யாக (DGP – Prisons) இருந்தபோது கைதிகள் மறுவாழ்வு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.

    பணி ஓய்வுக்குப் பின்னர், கடந்த 2012-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தலைவராக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்தார்.

    004 natraj

    அவரது காலத்தில் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர கேமரா கண்காணிப்பு, இணையவழிப் பதிவு போன்ற சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.

    இதன்பின்னர் கடந்த 2014-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக எம்.எல்.ஏவாக சட்டமன்றம் சென்று வந்தார்.

    கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதே மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட, ஆர்.நட்ராஜ், திமுக வேட்பாளர் வேலுவிடம் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தார்.

    இதன்பின்னர் அரசியல் நிகழ்வுகளில் பெரிதும் தலைகாட்டாமல் இருந்து வந்த ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ், தற்போது, முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்  கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

    004 natraj A

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதாகவும், ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இது மிக முக்கியமான ஒரு விஷயமாகும். இதனை நனவாக்குவதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.

    அதிமுகவின் எம்.எல்.ஏக்களாக இருந்த மரதகம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமான நிலையில், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான ஆர்.நட்ராஜ் ஐபிஎஸும், தவெகவில் சங்கமமாகியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆப்கனில் சோகம்; அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு
    Next Article சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!
    Editor TN Talks

    Related Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Trending Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.