ம்யூட்டில் முதலமைச்சர் இருப்பதால்தான், திருவள்ளுவருக்கு மீண்டும் ஆளுநர் மாளிகை காவி பெயிண்ட் அடித்திருப்பதாக குற்றம்சாட்டிய உதயநிதியை நெட்டிசன்கள் பதில் கமெண்டுகளில் வறுத்தெடுத்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்தளப் பக்கத்தில், எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.

தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது. ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம். இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் – அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு நெட்டிசன்கள் அளித்திருந்த பதில்கள் வருமாறு:-

Kishore Nedunchezhiyan @Kishore_voice:- 2024-ல் மியூட்டாக இருந்த முதலமைச்சரின் ஆட்சிக் காலத்தில்தான் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசும் முயற்சி தொடங்கியது. அப்போது இருந்த மியூட்டான, பொம்மையான முதலமைச்சர் தனது வெற்று விளம்பரங்களுக்கே நேரம் செலவிட்டதால், இதுபோன்ற அவலநிலை ஏற்பட்டது.

tamilarasan radhakrishnan @tamilarasa97555 :- திருவள்ளுவர் என்பவர் ஒரு ஞானி முனிவர் அவர் காவி உடை அணியாமல் வேறு என்ன உடை அணிவார் அண்ணா?

knaz @knazjohn :- Bro ரொம்ப active ஆ இருக்குறோம்னு காட்டிக்க இந்த மாதிரி halfboil வேல பன்னி மாட்டிக்காதிங்க ,Damage control பன்றதா நெனச்சி பன்னதெல்லாம் back fire ஆகிட்டு வருது.

Mayil Ravanan @mayil_ravan:- உங்க தொகுதி பக்கத்துல தானே Mylapore திருவள்ளுவர் கோவில் இருக்கு!! அங்கே பல நூறு வருடமா வைகாசி அனுஷம் அன்று (அது விசாகம் இல்லை அறிவிலியாரே!) வள்ளுவ நாயனாருக்கு பிறந்த நாள் விழா உற்சவம் நடக்கிறது!!.. அது தெரியுமா தெரியாதா, உமக்கு?!

Iyyappan @iyapkrish:- தி.மு.க ஆட்சியில் நடந்தால் “கருத்துச் சுதந்திரம்”, வேறு யாராவது செய்தால் “பாசிசம்” — இதுதான் பிரச்சனை. வைகாசி அனுஷம் பற்றிய விவாதம் பல தசாப்தங்களாக இருக்கிறது. அதைக் கூட தெரியாமல் “புதுசா உருட்டுறாங்க”ன்னு சொல்றது அறியாமையா, இல்ல அரசியல் வசதியா?
