Close Menu
    What's Hot

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    தமிழகத்தில் ஜூன் 6 வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!
    தமிழ்நாடு

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    Editor web1By Editor web1May 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 05 31 16h09m41s491
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கை அருகே சோழபுரம் எட்டிச்சேரிக் கண்மாயில், 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிக அரிய வகையான “ஆசிரியம்” கல்வெட்டு ஒன்றை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.

    புலிச் சிற்பம் மற்றும் மங்கலச் சின்னங்களுடன் கூடிய இந்தக் கல்வெட்டு, இப்பகுதியின் பழங்கால வணிக முறையையும் வீரத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சோழபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர், தங்கள் ஊர்க் கண்மாயில் ஒரு விசித்திரமான கல் இருப்பதாகச் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்குத் தகவல் அளித்தார். அதன்பேரில், தொல்நடைக் குழுவின் நிறுவனர் புலவர் காளிராசா தலைமையிலான குழுவினர் அந்த இடத்தில் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர்.

    vlcsnap 2026 05 31 16h10m13s262

    சோழபுரம் எட்டிச்சேரிக் கண்மாயின் நடுப்பகுதியில், உள்கடையில் உள்ள குமிழித் தூண் அருகே இந்தக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இது சுமார் 3 அடி உயரமும், ஒண்ணேகால் அடி அகலமும் கொண்டதாக உள்ளது.கல்வெட்டின் தனித்துவமான அமைப்புகள்:புலிச் சிற்பம்: கல்வெட்டின் மேற்பகுதியில் ஒரு காலைத் தூக்கியபடி இருக்கும் புலிக் உருவம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

    ‘ஸ்வஸ்தி ஸ்ரீ’ என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கும் இக்கல்வெட்டின் இறுதிப் பகுதியில் வில், அம்பு மற்றும் இரண்டு குத்துவிளக்குகள் மங்கலச் சின்னங்களாகக் காட்டப்பட்டுள்ளன.கல்வெட்டு கூறும் வரலாறு:புலியைக் கொன்ற வீரனுக்குப் பரிசு:’எட்டி’ என்ற வணிகப் பட்டத்தைக் கொண்ட ‘எரியன்’ என்பவன், செயங்கொண்ட சோழபுரம் (தற்போதைய சோழபுரம்) என்னும் இவ்வூரில் தங்களைப் புலியிடம் இருந்து காப்பாற்றிய ஒரு வீரனுக்கு ‘ஆசிரியம்’ (பாதுகாப்பு/நன்கொடை) வழங்கிய செய்தியை இக்கல்வெட்டு விவரிக்கிறது.

    vlcsnap 2026 05 31 16h09m44s060

    அக்காலத்தில் வணிகக் குழுக்களுடன் (வணிகச் சாத்து) வந்த வீரன், அவர்களைக் காப்பதற்காகப் புலியோடு சண்டையிட்டு அதைக் கொன்று, தானும் உயிர் நீத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவனது தியாகத்தைப் போற்றும் வகையிலும், அவனது சந்ததியினரைப் பாதுகாக்கும் பொருட்டும் இந்த எரியன் என்ற வணிகன் இந்தக் கண்மாயை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இதற்குச் சான்றாக, இன்றும் இந்தக் கண்மாய் ‘எட்டி’ என்ற வணிகப் பெயரைக் கொண்டு ‘எட்டிச்சேரிக் கண்மாய்’ என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வூரில் உள்ள மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பழமையான கல்வெட்டுகளில், இந்த ஊர் ‘முடிகொண்ட சோழபுரம்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்வெட்டில் இவ்வூரின் பெயர் ‘செயங்கொண்ட சோழபுரம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது வரலாற்று ஆய்வில் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது எனப் புலவர் காளிராசா தெரிவித்துள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகவனம்!. குர்குரே சாப்பிட்ட போது மூச்சுத்திணறல்!. இளைஞர் பரிதாப மரணம்!
    Next Article குர்பானி தடை உத்தரவு விவகாரம்: தமிழக அரசு தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
    Editor web1
    • Website

    Related Posts

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026

    தமிழகத்தில் ஜூன் 6 வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

    May 31, 2026

    ஆள் தூக்கும் அரசியல்… தவெகவுக்கு எதிராக கைகோர்க்கும் அதிமுக – திமுக!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    தமிழகத்தில் ஜூன் 6 வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

    ஆள் தூக்கும் அரசியல்… தவெகவுக்கு எதிராக கைகோர்க்கும் அதிமுக – திமுக!

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026

    “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.