Close Menu
    What's Hot

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!
    சினிமா

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இயக்குநர் மாரி செல்வராஜ், தனது அடுத்த புதிய (6-வது) திரைப்படத்தின் அறிவிப்பு நாளை (ஜூன் 1) வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் முற்போக்கு இயக்குநரான மாரி செல்வராஜ் இதுவரை 5 திரைப்படங்களை இயக்கி உள்ளார். தனது திரைப்படங்களில் எளியவர்களை குரலை ஒலிக்கும் கதைக்களங்களை திரையில் பேச வைத்திருப்பார் மாரி செல்வராஜ்.

    2018ல் சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான எளியவனின் வலியைப் பேசிய பரியேறும் பெருமாள், 2021ல் கிராமத்து மக்களின் அடிப்படை உரிமைக்காக ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சியை பேசிய கர்ணன்,  2023ல் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் சாதிய ஆதிக்கத்தை உடைத்தெறியும் மாமன்னன், 2024ல் உழைப்புச் சுரண்டலை உணர்த்திய உணர்வுப்பூர்வமான வாழை, 2025ல் விளையாட்டுத் துறையில் விளிம்பு நிலை மனிதர்கள் சந்திக்கும் சவால்களைப் பேசிய பைசன் காளமாடன் ஆகிய திரைப்படங்கள் மாரி செல்வராஜின் தனித்துவமான எழுத்துகள்.

    இந்தநிலையில், தனது 6வது திரைப்படத்தின் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். நடிகர் கதிர், பிரியங்கா மோகன் மற்றும் கயடு லோஹர் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார். மாரி செல்வராஜ் – இளையராஜா இணையும் முதல் படம் இது என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!
    Next Article ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!
    Editor TN Talks

    Related Posts

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    May 31, 2026

    கவின் கொலை வழக்கு – கவலைப்பட்ட இயக்குநர் கஸ்தூரி ராஜா

    May 31, 2026

    ’ஜனநாயகன்’ குறித்து பேச எனக்கு தைரியம் இல்லை..! ஹெச்.வினோத் ஓபன் டாக்..!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    தமிழகத்தில் ஜூன் 6 வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.