Close Menu
    What's Hot

    உயிரிழந்த அதிமுக நிர்வாகிக்கு மிகப்பெரிய மரியாதை – எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு

    எம்.ஜி.ஆர் உடன் முதல்வர் விஜய்..!! அதகளப்படுத்தும் தொண்டர்கள்..!! பரபரக்கும் திருச்சி..!!

    உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டு பெண்மணி..! குவியும் பாராட்டுகள்..! யார் இவர்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!
    Featured

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    Editor web3By Editor web3June 1, 2026Updated:June 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk kumbakonam suicide
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்” என உருக்கமாக வீடியோ வெளியிட்டு, அக்கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் காவல் எல்லைக்குட்பட்ட பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (37). இவர் தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தகர் அணியின் இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்ததுடன், திருப்பனந்தாள் கடைவீதியில் பூக்கடையும் நடத்தி வந்தார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும், நித்யஸ்ரீ என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

    தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல் மற்றும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் காரணமாக மகேந்திரன் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    தீக்குளிப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு மகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இரண்டு வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். அதில், சிதறிக் கிடக்கும் அதிமுக மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என்றும், கட்சியின் எதிர்காலம் குறித்துத் தனக்கிருக்கும் வேதனையையும் கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார்.

    மேலும், “எனது மறைவிற்குப் பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்த வேண்டும், அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும்” என்றும் அந்த வீடியோவில் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வீடியோவை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, மகேந்திரன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பனந்தாள் காவல் துறையினர், உயிரிழந்த மகேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் வெடித்த வடகலை – தென்கலை பிரச்சனை..!! பக்தர்கள் வேதனை..!!
    Next Article ராஜ்யசபாவில் ஒலிக்குமா தவெகவின் குரல்..?? வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    உயிரிழந்த அதிமுக நிர்வாகிக்கு மிகப்பெரிய மரியாதை – எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு

    June 1, 2026

    எம்.ஜி.ஆர் உடன் முதல்வர் விஜய்..!! அதகளப்படுத்தும் தொண்டர்கள்..!! பரபரக்கும் திருச்சி..!!

    June 1, 2026

    உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டு பெண்மணி..! குவியும் பாராட்டுகள்..! யார் இவர்?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உயிரிழந்த அதிமுக நிர்வாகிக்கு மிகப்பெரிய மரியாதை – எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு

    எம்.ஜி.ஆர் உடன் முதல்வர் விஜய்..!! அதகளப்படுத்தும் தொண்டர்கள்..!! பரபரக்கும் திருச்சி..!!

    உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டு பெண்மணி..! குவியும் பாராட்டுகள்..! யார் இவர்?

    வரும் 27ம் தேதி மதிமுக பொதுக்குழு..!! திமுக கூட்டணி தொடருமா? விலகுமா?

    நெற்றியில் நாமம், வாயில் கருப்பு துணி..!! நூதன ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.