Close Menu
    What's Hot

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»உயிரிழந்த அதிமுக நிர்வாகிக்கு மிகப்பெரிய மரியாதை – எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு
    Featured

    உயிரிழந்த அதிமுக நிர்வாகிக்கு மிகப்பெரிய மரியாதை – எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்னும் வேண்டுகோளுடன் உயிர்நீத்த தஞ்சாவூர் மாவட்டம் பாலூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி மகேந்திரன் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் அன்புத் தம்பி K.S. மகேந்திரன் அவர்கள், தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது.

    அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    அவரது ஒரு வயது மகன் பள்ளிப் படிப்பில் சேர்வது முதல், கல்விப் பயணம் முழுவதும் அவரின் கல்விச் செலவை  அ.இ.அதிமுகவே  ஏற்றுக்கொள்ளும்.

    மேலும், அவரது குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூ. 30 லட்சம், தஞ்சை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ரூ. 25 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்படும்.

    என் உயிருக்கு உயிரான கழக உடன்பிறப்புகளே… தயவு செய்து பொறுமையாக இருங்கள். எந்த ஒரு தவறான முடிவையும் எடுத்துவிடாதீர்கள். எத்தனையோ சோதனைகளை, சூழ்ச்சிகளை நாம் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம்.

    “அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் பொன்மொழியை நெஞ்சில் ஏந்தி முன்நோக்கி செல்ல வேண்டிய நேரம் இது. அன்புத் தம்பி K.S. மகேந்திரன் அவர்களின் தியாக உணர்வு கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. ஆனால், அதை நாம் களத்தில், நமது செயலில் காட்டுவோம். நெருப்பாற்றில் எதிர்நீச்சல் அடித்தே வெற்றிக் கரை கண்ட இயக்கம் இது. அதனால், எதையும் வென்ற நாம், இந்த சூழலையும் வெல்வோம்!

    தன் இறுதி மூச்சு வரை கழகத்தையே சுவாசித்து நேசித்த மாவீரன் K.S. மகேந்திரன் அவர்களின் நினைவாக, அனைத்து கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களிலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திட வேண்டுமென அனைத்து மாவட்டக் கழகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎம்.ஜி.ஆர் உடன் முதல்வர் விஜய்..!! அதகளப்படுத்தும் தொண்டர்கள்..!! பரபரக்கும் திருச்சி..!!
    Next Article தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை… செல்வப்பெருந்தகை கண்டனம்!
    Editor TN Talks

    Related Posts

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    June 1, 2026

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    June 1, 2026

    இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!

    அப்பா சொன்ன கிரிக்கெட் ரகசியம்.. என் லட்சியம் இதுதான்!. மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி!

    தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு?

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.