Close Menu
    What's Hot

    உலக அளவில் தமிழ் திரையுலகின் பெருமை ; 72-வது தேசிய திரைப்பட விருதாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

    அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் – சிவகார்த்திகேயன் பெருமித வாழ்த்து!

    ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் சுய கணக்கெடுப்பு – சென்னை மாநகராட்சி தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை… செல்வப்பெருந்தகை கண்டனம்!
    தமிழ்நாடு

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை… செல்வப்பெருந்தகை கண்டனம்!

    Editor web1By Editor web1June 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selva 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை, கோயம்பேடு பகுதியில் இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனமும், கவலையும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பகுதியில் இத்தகைய துணிகரமான குற்றம் அரங்கேறியிருப்பது தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கின் நிலையை உலுக்கும் விதமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    கோயம்பேடு பகுதியில் நேற்று இளம்பெண் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த வன்முறை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

    கொடூரக் கொலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது இதுவரை காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை மக்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும்.

    பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கண்காணிப்புக் கேமராக்களின் (CCTV) எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதோடு, காவல்துறை ரோந்துப் பணிகளைப் பலமடங்கு தீவிரப்படுத்த வேண்டியது அவசியம்.

    மக்களின் உயிருக்கும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பிற்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் இத்தகைய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்குத் தமிழக அரசு கடுமையான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

    கோயம்பேடு கொலைச் சம்பவம் சென்னை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவரின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉயிரிழந்த அதிமுக நிர்வாகிக்கு மிகப்பெரிய மரியாதை – எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு
    Next Article  அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    உலக அளவில் தமிழ் திரையுலகின் பெருமை ; 72-வது தேசிய திரைப்பட விருதாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

    July 18, 2026

    அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் – சிவகார்த்திகேயன் பெருமித வாழ்த்து!

    July 18, 2026

    ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் சுய கணக்கெடுப்பு – சென்னை மாநகராட்சி தகவல்

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலக அளவில் தமிழ் திரையுலகின் பெருமை ; 72-வது தேசிய திரைப்பட விருதாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

    அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் – சிவகார்த்திகேயன் பெருமித வாழ்த்து!

    ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் சுய கணக்கெடுப்பு – சென்னை மாநகராட்சி தகவல்

    ராயனுக்கு தேசிய விருதா? – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

    ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: ஆர். லில்லி, டாக்டர் ஆர். சுகுமார் பணியிட மாற்றம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.