Close Menu
    What's Hot

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured» அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
    Featured

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    Editor web3By Editor web3June 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பல்வேறு யூகங்கள் எழுந்து வரும் நிலையில், அவர் விரைவில் ஒரு முக்கிய முடிவை எடுக்கக்கூடும் என்ற தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, அவர் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நிதின் நபினை  சந்திக்க அனுமதி கோரியுள்ளார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ஜூன் 3ஆம் தேதிக்குள் அண்ணாமலை தரப்பில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    பாஜகவுடன் விரிசலா?

    மத்திய மோடி அரசின் ‘மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிரங்கமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். அதன் பின்னரே, அவருக்கும் பாஜக தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகக் கூறப்படும் யூகங்கள் தீவிரமடைந்தன. கடந்த சில நாட்களாக இதுகுறித்து பல்வேறு செய்திகள் உலா வந்தபோதிலும், சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அண்ணாமலை, இதற்கு மறுப்பு தெரிவித்து எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் மௌனம் காப்பது இந்த யூகங்களுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

    இதற்கிடையில், அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகப் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இருப்பினும், இது குறித்து அண்ணாமலை தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

    2021 முதல் 2025 வரை தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை அடிமட்டம் வரை கொண்டு சேர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தார்.

    இருப்பினும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தலைமை எடுத்த முடிவில் அண்ணாமலைக்கு உடன்பாடில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தேர்தல் பிரச்சாரங்களின் போது அவர் பெருமளவில் ஓரங்கட்டப்பட்டதாகவும், இதனால் அவர் மிகுந்த அதிருப்தியில் இருந்ததாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    தமிழக அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்களை ஏற்படுத்தக் கூடிய அண்ணாமலையின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது ஜூன் 3ஆம் தேதி தெரியவரும் என்பதால், ஒட்டுமொத்த அரசியல் உலகமும் அந்த நாளை நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை… செல்வப்பெருந்தகை கண்டனம்!
    Next Article இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!
    Editor web3
    • Website

    Related Posts

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    June 1, 2026

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    June 1, 2026

    இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!

    அப்பா சொன்ன கிரிக்கெட் ரகசியம்.. என் லட்சியம் இதுதான்!. மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி!

    தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு?

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டு பெண்மணி..! குவியும் பாராட்டுகள்..! யார் இவர்?

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.