Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு
    Featured

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksJune 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 josep vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக ஆட்சி அமைய விடாமல், திமுகவும், அதிமுகவும் சதி செய்ததாக முதலமைச்சர் விஜய் பகீரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

    தான் வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கலந்து கொண்டார்.

    தனது பிரசாரப் பேருந்தினை மேடையாக்கி அதன்மீது நின்றபடி நன்றி தெரிவித்து பேசிய விஜய், தவெக ஆட்சி அமைய விடாமல் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் சதி செய்ததாக திமுக, அதிமுகவைச் சுட்டிக்காட்டி குற்றம்சாற்றினார்.

    அவங்கதான் ஆட்சியிலயே இல்லையே, அவங்கள ஏம்பா குறை சொல்றேன்னு கேப்பாங்க. வேர்ல வென்னிய ஊத்திக்கிட்டுப் போனவங்கள வெளிச்சம்போட்டுக் காட்டாம பின்ன என்ன சொல்லுவாங்க என கேள்வி எழுப்பிய விஜய், மக்களிடம் இதையெல்லாம் நாம்தான் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும் என்றார்.

    மக்களுக்காக நாம் வேலை செய்து கொண்டிருக்க எதிர்க்கட்சிகளோ குதிரை பேரம் செய்கிறோம் என தப்புத் தப்பாக கதையடித்து விடுவதாகவும், கூறியவர் அடுத்து சொன்னதுதான் பகீர்.

    இந்த தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் அதாங்க திமுகவும் மற்றும் பலரும்  ஒண்ணா சேர்ந்துகிட்டு திருட்டுத்தனமா,  யாருக்கும் தெரியாம ஒரு மூலையில உக்காந்து பேரம் பேசி,  கூட்டு சேர்ந்து ஆட்சி  அமைச்சி கொள்ளையடிக்கத் திட்டம் போட்டங்க..

    அது ஏன் தெரியுமா? உங்களோட இந்த டிவிகே ஆட்சி அமைஞ்சா,  அவங்க பொழப்பே போயிடும். அந்த கொள்ளையடிக்கிறது, லஞ்சம், ஊழல் எல்லாமே கதம் கதம். அதான் இந்தக் காரணம்.

    திமுக இப்ப தீய சக்தி மட்டுமில்ல,  மக்கள விட்டு ரொம்ப தூரமான போன தூர சக்தி, ஓர ச்கதி,  கோர சக்தி,  பார சக்தி… எப்ப நீங்க தீர்ந்து போன சக்தியோட சேர்ந்துகிட்டு ஆட்சி அமைக்கணும்னு நெனைச்சீங்களோ,  அப்பவே இந்த திமுக தூர்ந்துபோன சக்தியாவும் மாறிடுச்சு என்றும் திமுக எல்லாம் தவெக பற்றிப் பேசாலாமா எனவும், விமர்சித்தார்.

    அம்பது, அறுபது வருஷமா இருந்த சாதியை, மதத்தை, காசு கொடுத்து ஓட்டு வாங்குவதை இந்த தேர்தலில் உடைத்திருப்பதாகவும் கர்ஜித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி… பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியா?
    Next Article திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?
    Editor TN Talks

    Related Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.