Close Menu
    What's Hot

    தூத்துக்குடி : ரூ.72 லட்சம் பண மோசடி..! தவெக நிர்வாகி – மனைவி மீது வழக்குப் பதிவு..!

    பருவமழை பொய்க்கும் அபாயம்!. அடுத்த 3 மாதங்களுக்கு கடும் வறட்சி நிலவும்!. WMO எச்சரிக்கை!.

    செஸ் உலகில் சாதனை..!! கார்ல்சனை வீழ்த்தி கெத்து காட்டும் பிரக்ஞானந்தா..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»உதகையில் நடிகர் ரஜினிகாந்த்!. புகைப்படம் எடுக்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!
    Featured

    உதகையில் நடிகர் ரஜினிகாந்த்!. புகைப்படம் எடுக்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

    Editor web3By Editor web3June 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ooty rajini fans
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பல ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை தந்துள்ள நடிகர் ரஜினிகாந்தைக் காணக் காத்திருந்த ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுக்க முடியாததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து, ரேடிசன் புளு ஹோட்டலுக்குச் சொந்தமான வாடகை கார் ஒன்றில் தனியாக உதகைக்கு வந்தார். அங்கு, பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்குச் சொந்தமான ‘தி மொனார்க்’ (The Monarch) நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருந்தார்.

    ரஜினிகாந்த் உதகையில் தங்கியிருக்கும் தகவல் காட்டுத்தீ போலப் பரவியதை அடுத்து, இன்று அதிகாலை முதலே ஏராளமான ரசிகர்கள் அந்த நட்சத்திர விடுதியின் முன்பு குவியத் தொடங்கினர். தங்கள் அன்புக்குரிய தலைவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துவிட வேண்டும் என அவர்கள் விடுதி மேலாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் அங்கு சில மணி நேரம் சலசலப்பு நிலவியது.

    ரசிகர்களின் கூட்டம் அதிகரித்த சூழலில், ரஜினிகாந்த் கர்நாடக மாநிலப் பதிவெண் (KA) கொண்ட இன்னோவா கார் மூலம் நட்சத்திர விடுதியிலிருந்து வெளியே வந்தார். ரஜினியின் காரைக் கண்டதும் உற்சாகமடைந்த ரசிகர்கள், புகைப்படங்கள் எடுக்க முண்டியடித்துக்கொண்டு காரின் குறுக்கே நின்றனர்.

    கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், காரை நிறுத்தாமல் உள்ளிருந்தபடியே ரசிகர்களைப் பார்த்து கையை அசைத்தவாறு ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்றார். அப்போதும் விடாத சில ரசிகர்கள் அவரது காரின் பின்னாடியே ஓடினர். எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காகக் கார் நிறுத்தப்படாமல் அங்கிருந்து சென்றது.

    நீண்ட நேரம் காத்திருந்தும் தங்கள் தலைவருடன் புகைப்படம் எடுக்க முடியாமல் போனதால், திரண்டிருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்..!! மலர்தூவி அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!
    Next Article 103வது பிறந்தநாள்: கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
    Editor web3
    • Website

    Related Posts

    தூத்துக்குடி : ரூ.72 லட்சம் பண மோசடி..! தவெக நிர்வாகி – மனைவி மீது வழக்குப் பதிவு..!

    June 3, 2026

    பருவமழை பொய்க்கும் அபாயம்!. அடுத்த 3 மாதங்களுக்கு கடும் வறட்சி நிலவும்!. WMO எச்சரிக்கை!.

    June 3, 2026

    செஸ் உலகில் சாதனை..!! கார்ல்சனை வீழ்த்தி கெத்து காட்டும் பிரக்ஞானந்தா..!!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தூத்துக்குடி : ரூ.72 லட்சம் பண மோசடி..! தவெக நிர்வாகி – மனைவி மீது வழக்குப் பதிவு..!

    பருவமழை பொய்க்கும் அபாயம்!. அடுத்த 3 மாதங்களுக்கு கடும் வறட்சி நிலவும்!. WMO எச்சரிக்கை!.

    செஸ் உலகில் சாதனை..!! கார்ல்சனை வீழ்த்தி கெத்து காட்டும் பிரக்ஞானந்தா..!!

    தென்மேற்கு பருவமழை: கேரளாவில் ஜூன் 4ம் தேதி தொடக்கம்.. IMD அறிவிப்பு..!!

    கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் இன்று..!! புகழாரம் சூட்டிய முதல்வர் விஜய்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.