Close Menu
    What's Hot

    செஸ் உலகில் சாதனை..!! கார்ல்சனை வீழ்த்தி கெத்து காட்டும் பிரக்ஞானந்தா..!!

    தென்மேற்கு பருவமழை: கேரளாவில் ஜூன் 4ம் தேதி தொடக்கம்.. IMD அறிவிப்பு..!!

    கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் இன்று..!! புகழாரம் சூட்டிய முதல்வர் விஜய்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»விளிம்பு நிலை மக்களுக்காகப் போராடியவர் கலைஞர் கருணாநிதி – ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கு.செல்வப்பெருந்தகை வாழ்த்து
    அரசியல்

    விளிம்பு நிலை மக்களுக்காகப் போராடியவர் கலைஞர் கருணாநிதி – ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கு.செல்வப்பெருந்தகை வாழ்த்து

    Editor TN TalksBy Editor TN TalksJune 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில் காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    004 malli

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், கலைஞரின் பிறந்தநாளில் எனது மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

    தமிழகத்தின் அன்பிற்குரிய தலைவரான அவர், சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீது கொண்டிருந்த வாழ்நாள் அர்ப்பணிப்பு, எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை மறுமலர்ச்சி அடையச் செய்ததாகவும்,

    கலை, இலக்கியம் உள்ளிட்ட பொதுவாழ்விற்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, என்றும் ஆழமான மரியாதையுடன் நினைவுகூரப்படும் எனவும் தெரிவித்துள்ளர்.

    004 rahul A

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘கலைஞர்’ மு.கருணாநிதி அவர்கள் தமிழ் மக்களின் கண்ணியத்திற்காகவும், சமூக நீதிக்காகம், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் போராடியவர் எனத் தெரிவித்துள்ளார்.

    அவர் வெறும் முதலமைச்சர் மட்டுமல்ல – ஒரு எழுத்தாளர், கவிஞர் மற்றும் சிந்தனையாளர். ஒவ்வொரு இந்தியரையும் சமமாக நடத்தும் அரசியலமைப்பின் மீது அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது பிறந்தநாளில் எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    004 spk

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், தமிழர் பெருமை, சமூக நீதி, மொழி உரிமை, தொலைநோக்கு பார்வை மற்றும் மாநில சுயாட்சிக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான இன்று அவருக்கு தங்களது புகழஞ்சலியை செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். கலைஞரின் எழுத்துப் பணியும், சிந்தனைகளும், மக்கள் நலப் பணிகளும் என்றும் நமது தலைமுறைகளை வழிநடத்தும் என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசட்டமன்றத்தில் பேச முடியாத இயலாமையே திருச்சியில் வெளிப்பட்டது!. திண்டுக்கல் ஐ. லியோனி சாடல்!
    Next Article எரிபொருள் சிக்கன நடவடிக்கை..!! புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு சுற்றறிக்கை..!!
    Editor TN Talks

    Related Posts

    செஸ் உலகில் சாதனை..!! கார்ல்சனை வீழ்த்தி கெத்து காட்டும் பிரக்ஞானந்தா..!!

    June 3, 2026

    தென்மேற்கு பருவமழை: கேரளாவில் ஜூன் 4ம் தேதி தொடக்கம்.. IMD அறிவிப்பு..!!

    June 3, 2026

    கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் இன்று..!! புகழாரம் சூட்டிய முதல்வர் விஜய்..!!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செஸ் உலகில் சாதனை..!! கார்ல்சனை வீழ்த்தி கெத்து காட்டும் பிரக்ஞானந்தா..!!

    தென்மேற்கு பருவமழை: கேரளாவில் ஜூன் 4ம் தேதி தொடக்கம்.. IMD அறிவிப்பு..!!

    கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் இன்று..!! புகழாரம் சூட்டிய முதல்வர் விஜய்..!!

    தவெகவுக்கு ஆதரவளிக்கிறேனா?. லியோனியின் விமர்சனத்திற்கு வைகோ பதிலடி!

    மாவட்ட வளர்ச்சிப் பணிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.