Close Menu
    What's Hot

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»விளையாட்டு மாநிலமாக மாறும் தமிழ்நாடு? மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..!
    இந்தியா

    விளையாட்டு மாநிலமாக மாறும் தமிழ்நாடு? மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..!

    Editor web4By Editor web4June 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழ்நாட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விளையாட்டு மாநிலமாக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முக்கிய முன்மொழிவுத் திட்டங்களை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

    முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தொலைநோக்குப் பார்வை மிக்க தலைமையின் கீழ், தமிழக அரசு விளையாட்டை ஒரு சக்திவாய்ந்த சமூக மாற்றக் கருவியாஅக் கருதி செயலாற்றி வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும். ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தில், தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது.

    விளையாட்டின் மூலம் இளைய தலைமுறையினருக்கு அதிகாரமளித்து, அவர்களை நாளைய சாதனையாளர்களாக உருவாக்கும் பணியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முனைப்புடன் செயல்படுகிறது. ஒலிம்பிக், பாராலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட முக்கிய சர்வதேச அரங்குகளில் தொடர்ச்சியான வெற்றிகளை ஈட்டி, உலகளாவிய விளையாட்டு வல்லரசாக இந்தியா உருவெடுக்கும் லட்சத்திற்கு தமிழ்நாடு முழு ஆதரவையும், பங்களிப்பையும் வழங்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க, பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இன்று டெல்லியில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் முனைவர் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விளையாட்டு மாநிலமாக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முக்கிய முன்மொழிவுத் திட்டங்களை அமைச்சர் முன்வைத்தார்.

    சர்வதேச மற்றும் தேசியப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய அனுபவத்தின் அடிப்படையில், 2029-ம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட வாய்ப்பளிக்க கோரிய முன்மொழிவினை இந்த சந்திப்பின்போது வழங்கப்பட்டது. இப்போட்டிகள் நடத்தப்படுவதால் தமிழ்நாட்டின் நீடித்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வலுவான அடித்தளமாக இது அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், திருச்சி மாவட்டத்தில் 48 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ‘திருச்சி ஒலிம்பிக் அகாடமி’ வளாகத்தில், தற்காப்புக் கலைகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைப்பதன் மூலம் விளையாட்டு மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த இயலும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 1,076 கி.மீ. நீள கடற்கரையையும், இளம் திறமையான விளையாட்டு வீரர்களின் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை விளையாட்டுகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

    மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விளையாட்டை ஊக்குவிகும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளை பாராட்டி, தனது முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்க உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடடே..!! கேரளாவில் ஆண்களுக்கு ‘நைட்டி’-ஆ..!! ட்ரெண்டாகும் ஃபேஷன்..!!
    Next Article கர்நாடக துணை முதல்வர் இவர்தான்..!! அறிவித்தார் சித்தராமையா..!!
    Editor web4

    Related Posts

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    June 3, 2026

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    June 3, 2026

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.