Close Menu
    What's Hot

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு
    Featured

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 mks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் திமுக பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

    டெல்லி “கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்” வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட SIR, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது. அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்திருக்கிறது.

    “இந்தியா” கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள்.

    தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.

    இக்கூட்டத்தில் பங்கேற்காத அதேநேரத்தில் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article100% தோல்வி; துணைக் கேப்டன் பதவி பறிப்பு!. ரிஷப் பண்ட்டிடம் கம்பீர் பேசிய ரகசியம்!
    Next Article மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    June 4, 2026

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    June 4, 2026

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.