Close Menu
    What's Hot

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»100% தோல்வி; துணைக் கேப்டன் பதவி பறிப்பு!. ரிஷப் பண்ட்டிடம் கம்பீர் பேசிய ரகசியம்!
    விளையாட்டு

    100% தோல்வி; துணைக் கேப்டன் பதவி பறிப்பு!. ரிஷப் பண்ட்டிடம் கம்பீர் பேசிய ரகசியம்!

    Editor web3By Editor web3June 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Gambhir Rishabh Pant
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிஆர்எஸ்-ஸில் 100% தோல்வி!. LSG கேப்டன் பதவியிலிருந்து விலகினார் ரிஷப் பண்ட்!

    சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட ரிஷப் பண்ட், டிஆர்எஸ் முடிவுகளை எடுப்பதில் மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

    இத்தொடரில் அவர் எடுத்த 9 டிஆர்எஸ் முடிவுகளும் முற்றிலும் தோல்வியில் முடிந்துள்ளன. ஃபீல்டிங்கின் போது 8 முறையும், பேட்டிங்கின் போது ஒரு முறையும் அவர் எடுத்த ரிவ்யூ முடிவுகள் அனைத்தும் அணிக்கு ஏமாற்றத்தையே தந்தன. கடந்த 2025 ஐபிஎல் சீசனிலும் அவர் எடுத்த 9 டிஆர்எஸ் முடிவுகளில் 8 தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சீசனில் லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்ததுடன், பண்ட்டின் பேட்டிங் ஃபார்மும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனால் கேப்டனாகவும் வீரராகவும் கடும் விமர்சனங்களைச் சந்தித்த ரிஷப் பண்ட்,  லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து  விலகினார். இதை லக்னோ நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

    இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, இந்திய அணியின் துணைக் கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார். இந்த அதிரடி மாற்றம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

    இந்நிலையில், துணைக் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்,  ரிஷப் பண்ட்டிடம் தனியாக ஆலோசனை நடத்தியதாக அணியின் உதவி பயிற்சியாளர் ரையான் டென் டோஸ்கேட் (Ryan ten Doeschate) கூறினார்.

    இதுகுறித்து டென் டோஸ்கேட் கூறுகையில், “இந்திய அணி போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த அணியில் தலைவனாகச் செயல்பட அதிகாரப்பூர்வ பதவி தேவையில்லை என்பதை ரிஷப் பண்ட் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார். ஒரு சீனியர் வீரராக அணியை எப்படி வழிநடத்த வேண்டும், களத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து கௌதம் கம்பீரும் பண்ட்டும் நேற்று நீண்ட நேரம் பேசினர். ரிஷப் பண்ட்டின் அசாத்தியமான ஆட்டத்திறனை நாங்கள் கட்டுப்படுத்த விரும்பவில்லை. ஆனால், சில நேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப தனது அதிரடி குணத்தைக் கட்டுப்படுத்தி, நிதானமாக விளையாட பழக வேண்டும் என கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்” என்றார்.

    பதவி பறிக்கப்பட்டாலும் பண்ட் வழக்கம் போல் உற்சாகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட டென் டோஸ்கேட், “இந்த முடிவால் பண்ட் எந்தவொரு சுணக்கமும் அடையவில்லை. அவர் எப்போதும் போல அணியை உற்சாகமாக வைத்திருக்கும் அதே துடிப்புடன் தான் இருக்கிறார். அவரது நடத்தையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவர் மீண்டும் பேட்டிங் செய்வதைக் காண ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“ஹார்டு டிஸ்க்குகள் மாயம்… ஊழல்வாதிகளைக் காக்கிறதா பேரசக்தி?” –இபிஎஸ் கேள்வி
    Next Article காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு
    Editor web3
    • Website

    Related Posts

    2027 ஐபிஎல் தொடரை தவிர்க்கிறாரா பேட் கம்மின்ஸ்..?? ரசிகர்கள் அதிர்ச்சி..!!

    June 3, 2026

    செஸ் உலகில் சாதனை..!! கார்ல்சனை வீழ்த்தி கெத்து காட்டும் பிரக்ஞானந்தா..!!

    June 3, 2026

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா..!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    100% தோல்வி; துணைக் கேப்டன் பதவி பறிப்பு!. ரிஷப் பண்ட்டிடம் கம்பீர் பேசிய ரகசியம்!

    “ஹார்டு டிஸ்க்குகள் மாயம்… ஊழல்வாதிகளைக் காக்கிறதா பேரசக்தி?” –இபிஎஸ் கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.