Close Menu
    What's Hot

    இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறீங்களா? இனி முதலில் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டுமாம்..!!

    தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கே எப்போதும் முன்னுரிமை: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

    இந்து இளம்பெண்கள் சுயமாக வாழ்வதற்கான தகுதியை சம்பாதிக்க வேண்டும்… கங்கனா ரணாவத் மீண்டும்  சர்ச்சைப் பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தேர்தல் விதி மீறல்… மாணிக்கம் தாகூர், நயினார் நாகேந்திரன் மீதான வழக்குகள் ரத்து… உயர்நீதிமன்றம் உத்தரவு
    Featured

    தேர்தல் விதி மீறல்… மாணிக்கம் தாகூர், நயினார் நாகேந்திரன் மீதான வழக்குகள் ரத்து… உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது தொடுக்கப்பட்ட  வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது.

    கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ்  சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின், ஏப்ரல் 18 ஆம் தேதி  தனது முகநூலில் பிரசாரம் மேற்கொண்டதாக, மாணிக்கம் தாகூர் மீது விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மாணிக்கம் தாகூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், 188-வது சட்டப்பிரிவின் படி, அரசு ஊழியர் எழுத்துப்பூர்வ புகார் அளித்திருந்தால் மட்டுமே  தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்ய முடியும் என்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மாணிக்கம் தாகூர் கோரிக்கையை ஏற்று, அவருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கை  ரத்து செய்து  உத்தரவிட்டார்.

    இதேபோல, திருநெல்வேலி மக்களவை தொகுதியில் 2024-ஆம் ஆண்டு தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திருநெல்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். திருநெல்வேலி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நயினார் நாகேந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன்,  மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, நயினார் நாகேந்திரன் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    Election Code Violation Madras High Court Manickam Thagoor Nainar Nagendran Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக, திமுக, காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் மீதான தேர்தல் வழக்கு… ஆகஸ்ட் 4ஆம்தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
    Next Article மாயமான டீக்கடை தொழிலாளி கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு… கொலையா? போலீசார் விசாரணை
    Editor TN Talks

    Related Posts

    இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறீங்களா? இனி முதலில் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டுமாம்..!!

    July 28, 2026

    தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கே எப்போதும் முன்னுரிமை: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

    July 28, 2026

    இந்து இளம்பெண்கள் சுயமாக வாழ்வதற்கான தகுதியை சம்பாதிக்க வேண்டும்… கங்கனா ரணாவத் மீண்டும்  சர்ச்சைப் பதிவு!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறீங்களா? இனி முதலில் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டுமாம்..!!

    தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கே எப்போதும் முன்னுரிமை: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

    இந்து இளம்பெண்கள் சுயமாக வாழ்வதற்கான தகுதியை சம்பாதிக்க வேண்டும்… கங்கனா ரணாவத் மீண்டும்  சர்ச்சைப் பதிவு!

    பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ முடக்கம் – தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா விளக்கம்!

    டிரம்ப் மனைவியை கொல்வது எப்படி..?? ஈரான் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ..!! உச்சகட்ட பதற்றம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.