Close Menu
    What's Hot

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு!. மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்!. பயணிகள் அவதி!
    தமிழ்நாடு

    தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு!. மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்!. பயணிகள் அவதி!

    Editor web3By Editor web3June 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    electric train
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் சிக்னல் கோளாறு காரணமாக, செங்கல்பட்டு – சென்னை கடற்கரை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் மற்றும் செமி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அலுவலகம் செல்வோர் மற்றும் பொதுமக்கள் கடந்த 30 நிமிடங்களுக்கும் மேலாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை கடற்கரை நோக்கிச் செல்லும் முக்கிய ரயில் வழித்தடத்தில் இன்று காலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, தாம்பரம் ரயில் நிலையத்திற்குள் ரயில்கள் வர முடியாத சூழல் உருவானது.

    இதன் விளைவாக, பின்னால் வந்த மின்சார ரயில்கள் மற்றும் செமி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் அடுத்தடுத்த ரயில் நிலையங்களிலேயே அவசர அவசரமாக நிறுத்தப்பட்டன.

    காலை நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் என ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில்களில் பயணித்துக் கொண்டிருந்தனர்.“கடந்த அரை மணி நேரத்திற்கு மேலாக ரயில்கள் நகராமல் ஒரே இடத்தில் நிற்பதால், குறித்த நேரத்திற்கு அலுவலகங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறோம்” என பயணிகள் வேதனை தெரிவித்தனர்

    பல பயணிகள் ரயில்களை விட்டு இறங்கி, மாற்று ஏற்பாடாக பேருந்து மற்றும் பிற வாகனங்களை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் ஜி.எஸ்.டி சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    சிக்னல் கோளாறு குறித்து தகவல் அறிந்தவுடன், ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோளாறைச் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விரைவில் சிக்னல் சரி செய்யப்பட்டு, ரயில் போக்குவரத்து சீராகும் என ரயில்வே நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாயிதே மில்லத்தின் 131வது பிறந்த நாள்..!! துயிலிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை..!!
    Next Article காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்கள்: 7 இடங்களுக்கு யார் யார்? அறிவிப்பு வெளியீடு..!!
    Editor web3
    • Website

    Related Posts

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    June 19, 2026

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    June 19, 2026

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    தவெகவில் இணைவா..?? ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க..!! பங்கம் செய்த செல்லூர் ராஜு..!!

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. மணக்குள விநாயகர் கோயிலில் தங்க தேர் இழுத்து காங். கட்சியினர் கொண்டாட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.