புதிதாக இயக்கம் தொடங்குவதாக அறிவித்துள்ள அண்ணாமலை மாரீச மான் வேடம் போடுவதாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிந்துரைத்துள்ளது.
பாஜகவில் இருந்து வெளியேறியுள்ள அண்ணாமலை, புதிதாக இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசியல் களத்தில் பல்வேறு கருத்துகள் கூறப்படும் நிலையில், தமிழகத்தில் பாஜகவின் புதிய உத்திதான் இந்த பெயர் மாற்றம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான் எனக் குறிப்பிட்டுள்ள பெ.சண்முகம்,
பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி – அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை எனவும்,
ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே எனத் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை போடுவது போடுவது “மாரீச மான் வேடம்” என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் எனவும் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
