Close Menu
    What's Hot

    இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் அட்டாக்..!! மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம்..!!

    பார்முலா 1-ஐ ஆளும் 19 வயது இளம் புயல்..!! தொடர்ச்சியாக 5-வது வெற்றி..!!

    மீன் வளத்தை பாதுகாக்க.. கேரளத்தில் நாளை முதல் 52 நாள் மீன்பிடித் தடை அமல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நள்ளிரவில் வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது!. துப்பாக்கி பறிமுதல்!. போலீசார் விசாரணை!.
    தமிழ்நாடு

    நள்ளிரவில் வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது!. துப்பாக்கி பறிமுதல்!. போலீசார் விசாரணை!.

    Editor web3By Editor web3June 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vellore arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனப்பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடி வந்த இரண்டு வாலிபர்களை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    பேரணாம்பட்டு அடுத்த பொகலூர் காப்புக்காடு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் கையில் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிவதாக மேல்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் காட்டில் நடமாடிய இரண்டு பேரை மடக்கிப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

    போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் வரதலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஜித் (24), ஊனை மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் காப்புக்காட்டுப் பகுதியில் உள்ள மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக வேட்டையாடி வந்துள்ளனர். பின்னர், அந்த விலங்குகளின் கறியை வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்றுப் பணம் சம்பாதித்து வந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட 2 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மேல்பட்டி போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், கைதான அஜித் மற்றும் புகழேந்தி ஆகிய இருவர் மீதும் வேறு காவல் நிலையங்களில் ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா? இவர்களுக்குப் பின்னால் பெரிய வேட்டைக் கும்பல் ஏதேனும் செயல்படுகிறதா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎத்தனை விஜய் வந்தா என்ன..?? அதிமுகவை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது..!! ஆர்.பி. உதயகுமார் காட்டம்..!!
    Next Article தோனி ரெக்கார்டை உடைத்த சுப்மன் கில்!. சச்சினின் மெகா சாதனையை நோக்கி அசுர வேகம்!
    Editor web3
    • Website

    Related Posts

    சிலுவம்பாளையமே சிரிக்கிறது ; ஓரம்போங்க மிஸ்டர் தீ.போ.ச – கலாய்க்கும் தவெக

    June 8, 2026

    திமுக கூட்டணியே இல்லை – ஒரே போடாய் போட்ட பெ.சண்முகம்

    June 8, 2026

    வக்ஃப் சொத்துக்களை பதிவேற்றம் செய்ய போர்க்கால நடவடிக்கை – அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் அட்டாக்..!! மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம்..!!

    பார்முலா 1-ஐ ஆளும் 19 வயது இளம் புயல்..!! தொடர்ச்சியாக 5-வது வெற்றி..!!

    மீன் வளத்தை பாதுகாக்க.. கேரளத்தில் நாளை முதல் 52 நாள் மீன்பிடித் தடை அமல்..!!

    8.2 ரிக்டர்.. நிலநடுக்கத்தால் ஆட்டம் கண்ட பிலிப்பைன்ஸ்..!! மரண பீதியில் ஓடிய மக்கள்..!!

    சிலுவம்பாளையமே சிரிக்கிறது ; ஓரம்போங்க மிஸ்டர் தீ.போ.ச – கலாய்க்கும் தவெக

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.