Close Menu
    What's Hot

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்
    தமிழ்நாடு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 kovai fire
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புகை ஓவியக் கலை மூலம் பிரபலங்களுக்கும் சமூக நிகழ்வுகளுக்கும் அஞ்சலி மற்றும் விழிப்புணர்வு படைப்புகளை உருவாக்கி வரும் கோவை கலைஞர் யூ.எம்.டி. ராஜா, மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு வித்தியாசமான முறையில் தீபாஞ்சலி செலுத்தியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் கிராமிய மணத்தை உலகறியச் செய்த முன்னணி இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு நாடு முழுவதும் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர்  யூ.எம்.டி. ராஜா தனது தனித்துவமான கலை வடிவத்தின் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்திய அவர், அதன் கரும்புகையை பயன்படுத்தி எந்தவித தூரிகை அல்லது பென்சிலும் இன்றி, சிறிய குச்சியின் உதவியுடன் இயக்குநர் பாரதிராஜாவின் உருவப்படத்தை வரைந்தார். மேலும், “இமயம் இருண்டது… இமயம் சரிந்தது…” என்ற உருக்கமான வாசகத்தையும் தனது படைப்பில் இடம்பெறச் செய்தார்.

    சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளை மையமாகக் கொண்டு  ஓவியங்களை உருவாக்கி வரும் யூ.எம்.டி. ராஜா, கடந்த காலங்களிலும் பல முக்கிய பிரமுகர்களுக்கு இதேபோன்ற முறையில் அஞ்சலி மற்றும் வாழ்த்து படைப்புகளை உருவாக்கி கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்த பாரதிராஜாவுக்கு, ஒரு சிறிய கலைஞனாக தனது மரியாதையையும் புஷ்பாஞ்சலியையும் இந்த படைப்பின் மூலம் செலுத்தியுள்ளதாக யூ.எம்.டி. ராஜா தெரிவித்தார்.

    Bharathiraja Tribute Coimbatore Artist Smoke Painting
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலகக் கோப்பை திருவிழா!. கால்பந்து வரலாற்றை ஆண்ட ‘மகுடங்கள்’ யார் யார்?. சாதனை வரலாறு இதோ!
    Next Article டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு
    Editor TN Talks

    Related Posts

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    June 10, 2026

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    June 10, 2026

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    உலகக் கோப்பை திருவிழா!. கால்பந்து வரலாற்றை ஆண்ட ‘மகுடங்கள்’ யார் யார்?. சாதனை வரலாறு இதோ!

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.