Close Menu
    What's Hot

    மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்!. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!. முடங்கிய நாடாளுமன்றம்!

    காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவு… மத்திய அரசு மீது சந்தேகம்  கிளப்பும் அண்ணாமலை!

    இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறீங்களா? இனி முதலில் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டுமாம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»பாலகிருஷ்ணாவின் ‘NBK 111’: மிரட்டலான ‘Entry of an Era’ க்ளிம்ஸ் வீடியோ!
    சினிமா

    பாலகிருஷ்ணாவின் ‘NBK 111’: மிரட்டலான ‘Entry of an Era’ க்ளிம்ஸ் வீடியோ!

    Editor web1By Editor web1June 11, 2026Updated:June 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை (ஜூன் 10) முன்னிட்டு, அவர் நடித்து வரும் ‘NBK 111’ திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, பாலகிருஷ்ணா- இயக்குநர் கோபிசந்த் மலினேனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘NBK 111’ என பெயரிடப்பட்டுள்ள படத்தை விருத்தி சினிமாஸ் பேனரில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்து வருகிறார். தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தநிலையில், பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை (ஜூன் 10) முன்னிட்டு ‘Entry of an Era’ என்ற பெயரில் வெளியான க்ளிம்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாலகிருஷ்ணாவின் வழக்கமான அதிரடி சண்டைக்காட்சிகளுடன் பின்னணி இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    ‘NBK 111’ படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத்குமார், அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படம் ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட அதிரடிப் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை!. கனடா அதிரடி!
    Next Article மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு இல்லை..!! கவலையில் டெல்டா விவசாயிகள்..!!
    Editor web1
    • Website

    Related Posts

    இந்து இளம்பெண்கள் சுயமாக வாழ்வதற்கான தகுதியை சம்பாதிக்க வேண்டும்… கங்கனா ரணாவத் மீண்டும்  சர்ச்சைப் பதிவு!

    July 28, 2026

    ‘ஜனநாயகன்’ 5 நாளில் வசூல் இவ்வளவா?

    July 28, 2026

     ‘இணையற்ற இலக்கியத் திறமை’…ஞானபீட விருது பெற்றவைரமுத்துவிற்கு அமித் ஷா வாழ்த்து!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்!. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!. முடங்கிய நாடாளுமன்றம்!

    காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவு… மத்திய அரசு மீது சந்தேகம்  கிளப்பும் அண்ணாமலை!

    இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறீங்களா? இனி முதலில் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டுமாம்..!!

    தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கே எப்போதும் முன்னுரிமை: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

    இந்து இளம்பெண்கள் சுயமாக வாழ்வதற்கான தகுதியை சம்பாதிக்க வேண்டும்… கங்கனா ரணாவத் மீண்டும்  சர்ச்சைப் பதிவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.