Close Menu
    What's Hot

    டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் சந்திப்பு…. மிகப்பெரிய வெற்றி என முதல்வர் டி.கே. சிவக்குமார் பெருமிதம்

    மேகதாது அணை… கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம்…

    முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ‘தனிச் சிறப்புச் சட்டம்’ – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்
    Featured

    ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ‘தனிச் சிறப்புச் சட்டம்’ – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 spk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சிறப்பு சட்டம் வகுக்கப்படவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;-

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக அபிசெல்வி என்ற இளம் பெண், அவரது அண்ணன் சிவஞானம் மற்றும் தாய் எஸ்தர் பாலின் ஆகியோரால் திட்டமிட்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

    இக்கொடூரத்தை மறைக்க, அந்தப் பெண் ‘விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்’ என நாடகமாடி, உடலை அவசர அவசரமாக இறுதி சடங்கு செய்ய முயன்ற குடும்பத்தினரின் செயல், சாதி வெறி மனிதநேயத்தை எவ்வளவு தூரம் மரத்துப் போகச் செய்யும் என்பதற்குச் சான்றாகும்.

    காவல்துறையின் துரித விசாரணையால் உண்மை வெளிச்சத்திற்கு வந்து, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது ஆறுதல் அளித்தாலும், இதுபோன்ற சாதியப் படுகொலைகளுக்கு என்றுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படப் போகிறது என்ற கேள்வி எழுகிறது.

    கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் மிகக் கடுமையான, முன்மாதிரியான தண்டனை விரைந்து பெற்றுத்தரப்பட வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் இதுபோன்ற ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ‘தனிச் சிறப்புச் சட்டம்’ உடனடியாக இயற்றப்பட வேண்டும்.

    மாற்றுச் சமூகத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியருக்குப் பாதுகாப்பு வழங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பிரிவுகள் தீவிரமாகச் செயல்பட வேண்டும்.

    சொந்த மகளின், தங்கையின் உயிரை விட சாதிப் பெருமைதான் பெரிது என நினைக்கும் இந்த பிற்போக்குச் சிந்தனை ஒழிக்கப்பட வேண்டும். சாதி மறுப்புக் காதல் மற்றும் திருமணங்களைச் சமூக ரீதியாகக் கொண்டாடுவதும், பாதுகாப்பதுமே இதற்கு நிரந்தரத் தீர்வாகும். சாதியற்ற, சமத்துவச் சமுதாயத்தை நோக்கி நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்!

    Honour Killings K Selvaperunthagai Special Law
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரே இரத்தம்… இருவேறு தேசம்!. உலகக்கோப்பையில் நேருக்கு நேர் மோதும் 7 ஜோடி சகோதரர்கள்!.
    Next Article மீண்டும் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!. அடுத்தடுத்து நடக்கும் 3-வது அதிர்ச்சிச் சம்பவம்!
    Editor TN Talks

    Related Posts

    டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் சந்திப்பு…. மிகப்பெரிய வெற்றி என முதல்வர் டி.கே. சிவக்குமார் பெருமிதம்

    July 28, 2026

    மேகதாது அணை… கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம்…

    July 28, 2026

    முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் சந்திப்பு…. மிகப்பெரிய வெற்றி என முதல்வர் டி.கே. சிவக்குமார் பெருமிதம்

    மேகதாது அணை… கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம்…

    முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

    மேகதாது அணை…. தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்திருக்கிறார் முதலமைச்சர் –  உதயநிதி சாடல்

    E20 மக்கள் கட்சிக்குப் பெருகும் ஆதரவு: இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்தைக் கடந்த பின்தொடர்வோர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.