Close Menu
    What's Hot

    கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு!. 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

    முன் ஜாமீன் மனு தள்ளுபடி… செந்தில் பாலாஜி எங்கே? – கையெழுத்திட வராததால் பரபரப்பு

    காங்கிரஸ் எம்.பி நில ஆக்கிரமிப்பு…. அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கேன் வில்லியம்சன் திடீர் ஓய்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
    Featured

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கேன் வில்லியம்சன் திடீர் ஓய்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

    Editor web3By Editor web3June 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Kane Williamson retirement
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த திடீர் முடிவின் காரணமாக, தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமது ஓய்வு குறித்துப் பேசியுள்ள வில்லியம்சன், “கடந்த சில நாட்களாகவே யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன்; ஓய்வு பெற இதுவே சரியான தருணம். நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் எனது நூறு சதவீத உழைப்பைக் கொடுத்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது. எனது சொந்த விருப்பத்தின் பேரில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதை பாக்கியமாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டே டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவர், தற்போது ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்துள்ளார்.

    16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 378 போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்சன், 19,346 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த ரன் குவிப்பாளராகத் திகழ்கிறார். இதில் 48 சதங்களும், 6 இரட்டைச் சதங்களும் அடங்கும். இவரது சிறப்பான கேப்டன்சியின் கீழ் நியூசிலாந்து அணி 2021ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றியதுடன், இரண்டு முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த திடீர் ஓய்வு முடிவு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    international cricket Kane Williamson sudden retirement
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேகதாது: பிரதமர், நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த கர்நாடக முதல்வர்!
    Next Article சேலத்தில் ஒரு ’பொள்ளாச்சி பாலியல் கொடூரம்’… வேட்டையாடப்பட்ட 50 பெண்கள்… சிக்கிய தவெக பிரமுகர்!
    Editor web3
    • Website

    Related Posts

    கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு!. 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

    July 30, 2026

    முன் ஜாமீன் மனு தள்ளுபடி… செந்தில் பாலாஜி எங்கே? – கையெழுத்திட வராததால் பரபரப்பு

    July 30, 2026

    காங்கிரஸ் எம்.பி நில ஆக்கிரமிப்பு…. அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு!. 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

    முன் ஜாமீன் மனு தள்ளுபடி… செந்தில் பாலாஜி எங்கே? – கையெழுத்திட வராததால் பரபரப்பு

    காங்கிரஸ் எம்.பி நில ஆக்கிரமிப்பு…. அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தவெகவில் ஓபிஎஸ்… தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு!

    தமிழ்நாட்டில் எல் நினோ பாதிப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கை… சிறப்புக் குழு அமைத்து அரசாணை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.